கரிகால் சோழனைப்பற்றி பட்டினப்பாலையில்
கரிகால் சோழனைப்பற்றி பட்டினப்பாலையில்-- கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்-- பிறர் பணியகத்திருந்து பீடு காழ் முற்றி-- அருங்கரைக் கவியக் குத்திக் குழிகொன்று-- பெருங்கை யானை பிடிபுக்கு ஆங்கு-- நுண்ணி தின் உணர நாடி நண்ணார்-- செறிவுடைத் திண்காப்பு ஏறிவாள் கழித்து-- உருகெழு தாயம் ஊழின் எய்தி----------பட்டினப்பாலை 221--227-------- வளைந்த கோடுகளையும் கூர்மையான நகங்களையும் கொண்ட பாதங்களை உடைய புலிக்குட்டி கூண்டுக்குள் வளர்க்கப்பட்டதைப்போல் சிறுவன் சிறையில் வளர்ந்தான்.சிறைக்குள் ஆற்றல் வளர்ந்தது.சிறைக்கு நெருப்பு வைக்கப்பட்ட போது அவனுடைய கூர் அறிவினால் பாது காக்கப்பட்ட உயரமான மதில் சுவர் மீது ஏறி எரியும் நெருப்பைக்கடந்து ,உறை வாளை உறுவி ,எதிரிகளுடன் போரிட்டு,சிறையிலிருந்து தப்பி ஆழமான குழிக்குள் அகப்பட்டுக்கொண்ட யானை தன் தந்தங்களால் குழியின் ஓரங்களைத் துளைத்து தோண்டிய மண்ணைக்கொண்டே குழியை மூடி குழியிலிருந்து தப்பி தன் பெண் யானையிடம் சென்று சேர்ந்ததைப்போல கரிகாலனும் தப்பித்து தன் அரசுரிமையை மீட்டான்.
Comments
Post a Comment