தொல்போர்க்குடி

தொல்போர்க்குடி முக்குலமும் ..முக்குலம் தந்த மூவேந்தர்களும் (தொடர்--1)

புறப்பொருள் வெண்பாமாலை பாடல் 35 ல் அய்யனாரிதனார் 13--குடிநிலை..கரந்தைப் படலத்தில்
எழுதியுள்ளது(Text )  வருமாறு:-

                                   கரந்தைப் படலம்       13  குடிநிலை

     மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்...கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று..
 
   மண்செறிந்த இந்த நிலவுலகினிடத்தே, பழைமையும் தறுகண்மையும்  கொண்டு, அவற்றின் சிறப்பாற்
   பிறர் எல்லாம் அறியும்படியான புகழுடனே விளங்கும் மறக்குடியினது வரலாற்றை உரைப்பது, குடிநிலை
   ஆகும்.
 
      பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்
       வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்
        கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
        முற்றோன்றி மூத்தக் குடி

பொருள்:-- பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்து கொண்ட தெளிந்து ஆரவாரிக்கும் ஊழிக்கடல்
                       வெள்ளமானது விட்டு நீங்கியதாக, அதன்பின் முற்பட மலைதோன்றி மண்ணானது
தோன்றாதிருந்த அந்தப் பழங்காலத்திலேயே, எல்லா மக்கள் குடியினும் முற்படத் தோன்றி, வாளாண்--
மையுடன்முதிர்ச்சிபெற்று வருவது இம்மறவனின் குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க
நாடொறும் புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் அதிசயமோ?

         வேத்தியன் மரபின் பின்வரும் இது, ம,னன் தன்னுடைய மறக்குடி மாண்பினைப் போற்றி உரைப்பதாகும். வெட்சியுள் வரும் துடிநிலையோடு இதனை ஒத்து க்காண்க. அங்குத் தலைவன் துடியனைப் போற்றுகின்றான், இங்கு மறவனை மன்னன் போற்றுகின்றான்..

வேத்தியன் மரபு, வெடசியுள் வரும் துடிநிலை..தொடரும்...சம்பந்த மூர்த்தி மழவராயர்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்