ஸ்ரீ வானமுட்டி பெருமாள்

ஶ்ரீஅத்திவரதரை இனி தரிசிக்க ....
திவ்ய தேசம் - கோழிகுத்தி
ஸ்ரீ வானமுட்டி பெருமாள்
1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்திமரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது.

மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

எம்பெருமான் - ஸ்ரீநிவாச பெருமாள்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி - பெருமாளின்
திருமார்பில் குடிகொண்டிருக்கின்றாள்..
ஸ்ரீ பூமாதேவி ஸ்வாமியின் அருகிலேயே
பொலிகின்றாள்..
தாயாருக்கு தனி சந்நிதி இல்லை..
உற்சவர் - யோக நரசிம்மர்
ஸ்ரீ சத்ர விமானம்
சதுர் புஜங்கள் பொலியும் 14 அடி உயர திருமேனி..
சங்கு சக்ர கதையுடன் அபய ஹஸ்தம்..

நின்றருளும் திருக்கோலம்..
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்
வணங்கித் தொழுத அடியவர்க்கு
வானளாவிய விஸ்வரூபத் திருக்காட்சி நல்கியதால் வானமுட்டிப் பெருமாள்..

பெருமாளைத் தரிசித்தால் கோடி ஹத்தி (குற்றங்கள்)
தொலையும் என்பதாக ஐதீகம்..
கோடி ஹத்தி என்பதே கோழிகுத்தி என்றாகியது

பிப்பிலர் என்ற முனிவருடைய தோல் நோயை நீக்கி
அவருக்கு திருக்காட்சி
வழங்கியதாக தலபுராணம்..

பின்னும் தஞ்சை சரபோஜி மன்னர்
பெருமாளின் தரிசனம் பெற்று
தோஷங்கள் நீங்கப் பெற்றார
இத்தகைய சிறப்புகளையுடைய
திருத்தலம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் 'கோழிகுத்தி' எனும் கிராமத்தில் உள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்