#விரத_மகிமை...நாராயணன்....


      #விரத_மகிமை

#காக்கும் கடவுளான விஷ்ணு பகவானுக்கு நடத்தப்படும் பூஜையே சத்யநாராயண பூஜையாகும்.

 *பெருமாள் எடுத்த #பலவிதமான அவதாரங்களில் #சத்யநாராயணர் அவதாரமும் ஒன்று.*

 இந்த சத்யநாராயணருக்கு நடத்தப்படும் பூஜை #மிகவும்_புனிதமாக கருதப்படுகிறது.

 இப்பூஜை #திருமணம், முக்கிய திருவிழாக்கள், #வீடு, #நிலம் வாங்கும் போது என எந்த ஒரு #நல்லகாரியத்தின் போதும் #நடத்தப்படுகிறது.

 பக்தர்கள் சத்யநாராயண பூஜையை *#பவுர்ணமியன்று* நடத்துகிறார்கள்.

 எந்த ஒரு காரியத்திலும்

#வெற்றிகிடைக்கவேண்டும்
என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு இந்த பூஜையை
#செய்ய_வேண்டும்.
முழுமுதற் கடவுளான *விநாயக பெருமானை* வணங்கி இந்த சத்யநாராயண பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

 அதைத் தொடர்ந்து *நவக்கிரக பூஜை,* மற்ற சில பூஜைகளையும் செய்ய வேண்டும்.

 பின் விஷ்ணுவின் பல்வேறு நாமங்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படும்.

பூஜை முடிந்த பிறகு வகை வகையான உணவுகள் பிரசாதமாக நிவேதிக்கப்படும்.

 இப்பூஜையின் போது சத்யநாராயணரின் வரலாற்றை விவரிக்கும் கதையை,
பூஜை செய்பவர்கள் அல்லது வயதான #பெரியவர்கள் யாராவது #கூறவேண்டும்.

*பவுர்ணமி மற்றும்
#மகர_சங்கராந்தி (பொங்கல்) அன்று இப்பூஜையை நடத்த மிக உகந்த நாட்கள்.*

பொதுவாக, சத்யநாராயண பூஜை கோயில்களிலோ அல்லது வீட்டிலிலே நடத்துவார்கள். #கோயிலில்_நடத்தும் போது பக்தர்கள் கோயில் #குருக்களின்உதவியோடு இப்பூஜையை #நடத்துகிறார்கள்.

         

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்