அனுமன் மலை கொண்டு வந்த தோற்றம்


அனுமன் மலை கொண்டு வந்த தோற்றம்
மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும், மண்-
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள,
குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்-
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே.
எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள்,
'செறி சுடர் மந்தரம் தருதி, சென்று' என,
'வெறிது உலகு!' எனக் கொடு, விசும்பின் மீச்செலும்
உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான்.
பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள்,
ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன்,
ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய
தாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான்------கம்பராமாயணம்
 

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்