Skip to main content

சங்கரன்கோயில்

திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol ! என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது.

உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். கதை மேலும் போகிறது. இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். இதுவரை சிவனாரைப் பற்றி மட்டுமே குறித்து வந்த கதை பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரியார் இராமானுசாச்சாரியாரால் தொடங்கப்பெற்ற தத்துவக் கொள்கையை விளக்கும் வரலாற்றைத் திடீரெனப் புகுத்துகிறது. இந்தக் கோயிலோடு திருமாலுக்குத் தொடர்பினை உண்டாக்கி அதற்கு ஆதரவு தேடும் பொருட்டுச் சங்கரலிங்கத்தின் பெயராகிய சங்கரநயினார் என்பதற்குப் பதிலாகச் சங்கரநாராயணர் ( சிவனும் திருமாலும் ) என்ற பெயரை முதன்மையாக்கும் இக்கதையின் பகுதி பிற்காலத்தில் நுழைக்கப்பட்டதென்பது சிறிதும் சந்தேகமில்லாதது.

கோயிலின் அமைப்பு அதன்கண் திருமாலுக்கு ( சங்கரநாராயணருக்கு ) ஆரம்பத்தில் கோயில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. கோயில் இரண்டு பெரும் பகுதிகளை உடையது. அவற்றில் பெரியதில் சிவபெருமானின் அடையாளமாகிய சிவலிங்கம் ( சங்கரலிங்கம் ) இருக்கிறது. சின்னதில் கோமதி அம்பிகை இருக்கின்றாள். மூன்றாவதாக இரண்டுக்கும் இடையிலே நாராயணருக்கு ஒரு சிறு கோயில் நுழைக்கப் பெற்றது. ஆனால், இந்தக் கோயில் இந்த மூன்றாவது பகுதியில் புகுத்துதலுக்குப் பொருந்தியதாக இல்லை. எப்படியெனில் வழிப்போக்கனாகிய ஓர் ஏழை அடியேனும் கூடத் தெருவிலிருந்தபடியாகவே கண்டு வழிபாடு செய்வதற்கு ஏதுவாகச் சிவலிங்கம், அம்மை ஆகிய இறைவன், இறைவி சன்னிதிகள் தலைவாயிலிலிருந்து பல தொடர்க் கதவுகளினால் திறந்திருப்பதுபோல, சங்கரநாராயணர் சந்நிதிக்குச் சிறிதும் வசதி இல்லை. அதனால் சங்கரநாராயணர் கோயில் தலைவாசல் இல்லாததாய்ப் பெரிய கோயிலின் உள்ளேயே அடங்கிப் போய்விட்டது. அதாவது தெருவிலிருந்தபடியே இறைவன் அல்லது இறைவியை வழிபடும் வசதி சங்கரநாராயணர் சன்னதியில் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.

சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன. வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது. ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக்காலத்தில் தருமகர்த்தாக்கள் இந்தக் கோயிலில் இரண்டு தெய்வங்களும் இருப்பதை மிகைப்படுத்தி வருவதோடு நிலங்களுக்குப் பட்டாவைச் சங்கரநாராயணர் என்ற பெயருக்கே ஆக்கி வருகிறார்கல். என்றாலும், கோவிலின் பூஜை முறைகளில் இப்புதுத் தெய்வம் ( சங்கரநாராயணர் ) மிகச் சிறு பகுதிக்கே உரியதாக இருக்கிறது. சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.

இன்றும் சங்கரன்கோவிலில் தீவிர சிவபக்தர்கள் சங்கரநாராயணர் சன்னிக்குள் செல்ல மாட்டார்கள். மேலும் சிலர் உள்லே சென்று இடப்பகுதிப் பிரகாரத்தை மட்டும் சுற்றிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இது கண்ணால் கண்டுவரும் உண்மை.

தக்கணை தவமிருந்து முக்தி பெற்றது, வீர்சேனை பிணி தீர்ந்தது, சயந்தன் வினை தீர்ந்தது, கானவன் வீடுபேறடந்தது, கன்மாடன் நற்பேறடைந்தது போன்ற தகவல்களும் தலபுராணத்தில் காணக்கிடக்கின்றன. பத்திரகார முனிவன், இந்திரன், அகத்தியர், பைரவர், சூரியன், அக்கினி ஆகியவர்களும் சங்கரனாரையும் கோமதியம்மையாரையும் வழிபட்டுத் திருவருள் பெற்றுள்ளதாகவும் தல புராணம் கூறும்.

அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரை ஆட்சி செய்த பிரகத்துவச பாண்டியன் சங்க்கரனாரை வழிபட்டு விசய குஞ்சரபாண்டியன் என்ற வாரிசைப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.

சரித்திர வரலாறு -கல்வெட்டு

த்ச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு 200-வது பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம்.

சாலிவாகன சகாப்தம் 945 ( கி.பி. 1022 ) கொல்லம் ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்க்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 கொல்லம் ஆண்டு 349-இல் சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்க்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார். பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார். இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது.

உக்கிரபாண்டியர் இக்கோயிலைக்கட்டிய காலத்திலேயே கருவை நகரை ஆண்ட பேரரசராகிய பிரசுத்துவச பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்தார் என்பதும், அவர் மகன் விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரநயினார் கோயில் இருக்கும் இடம் கருவை நகர்க் கோயிலுக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் தல புராணத்தால் அறிந்திடும் வரலாறுகள்.

சீவலமாறர்

சீவலமாற பாண்டியரே இத்தலபுராண ஆசிரியர். இவர் இவ்வூரிற் பலகாலம் தங்க்கியிருந்தனர். .அவர் பெயரால் ஊருக்குத் தென்மேற்கே இப்போதுள்ள சீவலப்பேரி என்ற குளத்தினாலும், கிழக்கே இரண்டு மைலுக்குள் உள்ள சீவலராயன் ஏந்தல் என்ற ஊராலும் நிலைநாட்டப்பெறும். இவர் பெயர் கங்கை கொண்டான், மானூர், தென்காசி, சீவலப்பேரி ஆகிய தலங்களிலும், சம்பந்தப்படுகிறது.

கோமதியம்மை திருமுன்பு சக்கரம்

இன்றைக்கு ஒரு 183 ஆண்டுகளுக்கு முன்னர் (2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது ). கி.பி. 1785-இல் இறைவர் திருவடியடந்த மாபாடியம் சிவஞான முனிவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது திருவாவடுதுறையிற் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார். இரைவர் திருவடிக்கு மெய்யன்பராதலினாலே அவரிடம் குட்டம், குன்மம் போன்ற நீங்க்கா நோய்களையும் போக்கும் அருட் சக்தி பதிந்து விளங்கியது அவர் சங்கரன்கோயிலுக்கு வந்து மேலை வீதியிலுள்ள தமது திருமடத்தில் எழுந்தருளியமையை அறிந்த நெற்கட்டுஞ்ச்செவலின் குறுநில மன்னராகிய சிவக்னான பூலித்தேவர் குருமூர்த்தியைக் கண்டு பணிந்து அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்க்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவை சிவ பூஜை, குரு பூஜை, மகாசேசுர பூஜைகளின் பொருட்டு சாசனம் செய்து கொடுத்தார்.

வேலப்ப தெசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அச்சககரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது. தீராத நோயும் தீர்ந்து போகின்றது. இந்தத் தேசிக மூர்த்திகள் சங்கரன்கோவிலிலே வழிபாடியற்றி இருக்கும்போது ஒரு புரட்டாசி மாத மூல நாளிலே சங்க்கரனார் திருவடிமலர் சேர்ந்து பேரின்பம் எய்தினார். மேற்கு வீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வீற்றிருந்து இன்றும் அருள்பாலித்து வருகின்றார். ஆண்டுதோறும் குருபூஜையும் சமபந்தி போஜனமும் இன்றும் தவறாமல் நடைபெற்று வருகின்றது., . .------சங்கரன்கோவில் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆடி தபசு திருவிழா தான்.இந்த ஆடி தபசு திருவிழா ஜூலை 12 ஆம் தேதி சங்கரன்கோவிலில் வெற்றிகரமாக துவங்கியது .திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோமதி அம்மனுக்கு, சுவாமி சங்கர நாராயணராகவும் பின்னர் சங்கர லிங்கராகவும் காட்சியளிக்கும் தபசுக் காட்சி வைபவம்.

இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் இந்த திருவிழா நடைபெறும். அம்பாள், சிவன் , விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாக கொண்டாடப்படுகிறது . இந்த விழா கோலாகலமாக 12 நாட்கள் நடக்கும். இந்த திருவிழா அம்பாளுக்கான பிரதானம் என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு

பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ