கிளி சோழன்


திருவரங்கம்------ஒரு நாள் சோழ மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடி விட்டு காவிரிக்கரையில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.அப்போது மரத்தின் மேல் அமர்ந்திருந்த கிளி ஒன்று "இது நாராயணன் வாழும் இடம் "எனப்பொருள்பட ஸ்லோகங்கள் சொல்வதைக்காதில் கேட்ட மன்னன் வியப்படைந்தான்.ஆட்களை விட்டு அவ்விடத்தைத்தோண்டி அகழ்ந்து பார்த்த போது பூமிக்கடியில் புதைந்து போன சிறிய மண்டபத்துடன் கூடிய ரங்கநாதர் உருவச்சிலையைக்கண்டான். அதைவெளிக்கொணர்ந்தான்.பின்பு மறு நாள் ரங்க நாதர் அவன் கனவிலும் தோன்றினார்.எனவே மன்னன் மணல் மேடுகளை அகற்றி திருவரங்கம் கோயிலைக்கட்டிப் புணரமைத்தான் .புதிதாக மண்டபம் ஒன்றும் கட்டினான்.அதற்கு "கிளி மண்டபம்" என்று பெயரிட்டான்.காவிரியாற்றின் இருபுறமும் வடவாறு,தென்னாறு எனக்கால்வாய்கள் வெட்டி வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகளை செய்தான்.கோயிலைப்புதுப்பித்து திருப்பணிகள் செய்து நாள்தோறும் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற வழி செய்தான்.அதன் பின்னர் கோயில் "திரு வரங்கன் திருப்பதி" என அழைக்கப்பட்டது. அந்த சோழமன்னன் வேறு யாரும் அல்ல.கிளி சோழன் என அழைக்கப்பட்ட" கிள்ளி வளவன்"எனும் மன்னனே ஆவான்."கோயிலொழுகு" எனும் நூலில் இவ்வாறு கிள்ளி வளவனைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Photo: திருவரங்கம்------ஒரு நாள் சோழ மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடி விட்டு காவிரிக்கரையில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.அப்போது மரத்தின் மேல் அமர்ந்திருந்த கிளி ஒன்று "இது நாராயணன் வாழும் இடம் "எனப்பொருள்பட ஸ்லோகங்கள் சொல்வதைக்காதில் கேட்ட மன்னன் வியப்படைந்தான்.ஆட்களை விட்டு அவ்விடத்தைத்தோண்டி அகழ்ந்து பார்த்த போது பூமிக்கடியில் புதைந்து போன சிறிய மண்டபத்துடன் கூடிய ரங்கநாதர் உருவச்சிலையைக்கண்டான். அதைவெளிக்கொணர்ந்தான்.பின்பு மறு நாள் ரங்க நாதர் அவன் கனவிலும் தோன்றினார்.எனவே மன்னன் மணல் மேடுகளை அகற்றி திருவரங்கம் கோயிலைக்கட்டிப் புணரமைத்தான் .புதிதாக மண்டபம் ஒன்றும் கட்டினான்.அதற்கு "கிளி மண்டபம்" என்று பெயரிட்டான்.காவிரியாற்றின் இருபுறமும் வடவாறு,தென்னாறு எனக்கால்வாய்கள் வெட்டி வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகளை செய்தான்.கோயிலைப்புதுப்பித்து திருப்பணிகள் செய்து நாள்தோறும் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற வழி செய்தான்.அதன் பின்னர் கோயில் "திரு வரங்கன் திருப்பதி" என அழைக்கப்பட்டது. அந்த சோழமன்னன் வேறு யாரும் அல்ல.கிளி சோழன் என அழைக்கப்பட்ட" கிள்ளி வளவன்"எனும் மன்னனே ஆவான்."கோயிலொழுகு" எனும் நூலில் இவ்வாறு கிள்ளி வளவனைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்