கோச்செங்கனான்

சோழ மன்னன் சுபதேவனுக்கும் கமலவதி என்பாளுக்கும் பிறந்தவன் சோழன் செங்கணான்.கமலவதி பிரசவ வேதனை கண்டபோது சோதிட வல்லுனர்கள் இன்னும் ஒரு நாளிகை கழித்து குழந்தை பிறக்குமானால் மூவுலகத்தையும் ஆளக்கூடிய மன்னனாவான் என்று கூறிய படியால் தன்னை கால் மேலாகவும் தலை கீழாகவும் இருக்கும்படி கட்டி ஒரு நாளிகை கடந்தபினர் கட்டை அவிழ்த்து விடும்படிகூறி குழந்தையை மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த போது கண்கள் சிவந்து பிறந்தபடியால் செங்கணானென்று பெயரும் இட்டு தாய் மடிந்தாள். இக்குழ்ந்தையே பெயர் பெற்ற கோச்செங்கணாவான்.
இவன் சங்ககால சோழ அரசர்களில் ஒருவன்.கிள்ளி வளவனுக்கு பின்னர் ஆண்ட மன்னர்களில் மக்கள் மனதில் அழியா இடம்பெற்றவன்.இவன் எழுபது கோவில்களை காவிரிகரை ஓரத்தில் கட்டியதாக திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுகிறார். அம்பர், வைகல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களையும் கட்டியவன் இவனே. இவனுக்கு நல்லடிக்கோன் என்ற் மகனும் இருந்தான். புறநானூறு, களவழிநாற்பது என்ற சங்கனூல்களிலும், திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,திருமங்கை ஆழ்வார் ஆகியோறாலும் பாடப்பற்றவன் செங்கணான்
கோச்செங்கனானுக்கு தென்னவராயன், தென்னரையன்,தென்கொண்டான், தென்னாண்டான்,தென்னப்பிரியன், தென்னுடையான், தென்னாளி, என்ற பெயர்களும் உண்டு. இவன் தென்னவராய நல்லூர், தென்னவநாடு, தென்னங்குடி, தென்னம்புலம், தென்குடி, தென்பரை,தென்பாதி, தென்னங்குளம், தென்னவராயன் பேட்டை என்னும் ஊர்களை உருவாக்கி ஆட்சிபுரிந்தவன்.
செம்பியன் மரபில் வந்த செங்கண் சோழன், தென்னூர் என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். கடைச்சங்கால இறுதியில் வாழ்ந்தவன், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவனாவான். ஈசனுக்கு 70 மாடக்கோயில்கள் கட்டி அரசாண்டதாக திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.
இவன் கட்டிய ஆனைபுகாக்(மாட) கோயில்களிள் ஆனைக்கா, பெண்ணாகடம், சாய்க்காடு,மண்ணிப்படிக்கரை, செம்பிருப்பு, செம்பொன்பள்ளி, வடதலைச்சங்காடு, தெந்தலைச்சங்காடு, ஆக்கூர், பெருமுளை, தேரழுந்தூர், வைகல், நரையூர் (மணிமாடம்) துற்காட்சி, நாலூர், ஆவூர், பசுபதிமங்கை, மாத்தூர், குடவயில், இங்கண், மருகல்,அம்பர், நன்னிலம், பாம்புரம், மாதூர், கீழ்வேளூர், தேவூர், சிக்கல், களப்பாள், இராசசேரிபுரம், கீழைவழி, தண்டலை, நீணேறி, வலிவலம், கீழையிலரன், பழையாறுவடதளி, பழையாறுதென்றளி, பழையாறுகீழ்த்தளி, பெருவேளூர், நாகைமலையீச்சரம், இராமனதீச்சரம், பெரும்கடம்பனூர், சேய்ஞலூர், நாகை மேலைக்காயரோகணம், வீழிமிழலை,பனையூர், என்னும் 47 கோயில்கள் புலப்பட்டன.
மற்ற 23 கோயில்கள் புலப்படவில்லை. சேரமன்னன் கணைக்கால் இருபொறையைச் சிறைபிடித்துக் குடவாயில் கோட்டத்து சிறையில் வைத்தான்,பின்பு பொய்கையார் என்னும் புலவர் பாடிய களவழிநாற்பது படலைக் கேட்டு சேரமன்னன் சிறை நீக்கி அரசுரிமை அளித்தான். இவன் மரபோர் தென்னவராயன், தென்னரையன்,தென்னன்,தென்கொண்டன், தெங்கொண்டான், தெங்கண்டான்,தெங்கிண்டான், தென்னப்பிரியன், தின்னாப்பிரியன், திண்ணாப்பிரியன் என்னும் பட்டங்களை பெற்றனர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்