திருபுவன கோயில்.
காலம்
கடந்து சரித்திரச் சான்றாக சோழச்சின்னங்களுள் ஒன்றாக
விளங்குகிறது,திருபுவன கோயில். கருவறை விமானம் உயரமாகவும் இராஜகோபுரம்
தாழ்வாகவும் அமைந்து தஞ்சை, தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம், ஆகிய
கோயில்களில் விமானங்களை ஒத்தமைந்த சிறப்புடையது. அனைவரும் காணவேண்டிய
அற்புதத் திருக்கோயில்.
3ம் குலோத்துங்கன் வடநாட்டில் கிடைத்த பெருவெற்றியின் மூலம் பொன்னும், மணியும்,பொருளும் அள்ளிக் கொண்டு வந்த திருபுவனத்தில் கோயில் எழுப்பினான்.
ஸ்ரீகம்பஹரேஸ்வரர் (நடுக்கம் தீர்த்த பெருமான்)
கம்பம்=பயன்
பிரகலநாதன்,திருமால்,தேவர்,மக்கள் ஆகியோரின் நடுக்கத்தை நீக்கி பயத்தைப் போக்கியதால் இத்தல இறைவனை கம்பஹரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தமிழில் நடுக்கம் தீர்த்தப் பெருமான் எனப் பொருள்படும்.
ஸ்ரீ சரபமூர்த்தி தோன்றுதல்
இத்தலத்தில் இறைவனின் கல்வெட்டு பெயர். திருபுவன ஈச்சரமுடைய மகாதேவர்.
இரண்யகாசிபுவின் முன் நிற்கிறான் பிரகலாதன். இதோ இந்தத்தூணில் இருக்கிறானா உன் நாராயணன் என இடிபோல் முழங்குகிறான் இரண்யன். என் நாராயணன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனப் பிரகலாதன் கூற தன் கையிலிருந்த கதாயுதத்தால் தூணை இரண்டாக பிளக்கிறான் இரண்யன். பிளவுபட்ட தூணிலிருந்து ஆக்ரோஷமாக சிம்ம முகத்துடன் கர்ஜனையுடன் மனித உடலுடன் வெளிப்படுகிறார் ஸ்ரீநரசிம்மம்.
கடும் போரின் பின் இரண்யனை தன் மடியில் போட்டு வாசற்படி நிலையில் அந்தி வேளையில் இரண்யனின் வரத்தின் படியே வயிற்றை கை நகங்களால் கிழித்து குடலை உருகி மாலையாகப் போட்டு இரத்தம் முழுவதையும் உறிஞ்சிக்குடிக்கிறார். இரன்யனின் இரத்தம் குடித்த நரசிம்மம் மதிமயங்கி உலகையே அழிக்கத் தொடங்கினார். பிரகலாதன்,தேவர், முனிவர் என அனைவரும் செய்வதரியாது உலகீசன் சிவபெருமானிடம் வேண்டி முறையிட்டனர்.
அப்போது சிவபெருமான் சரபப்பறைவையின் வடிவங்கொண்டார்.நரசிம்மத்தை நோக்கிச் சென்றார். சரபப்பறவையைக் கண்ட நரசிம்மம் தன்னைவிட அதிக உக்கிரம் கண்டு ஓடத்துடங்கியது. சரபம் துரத்த, நரசிம்மம் ஓட ஒரிடத்தில் நரசிம்மத்தின் மிது சபரப்பறவை பட நரசிம்ம உக்கிரம் குறைந்து அடங்கப்பெற்று அமைதியானது. பின் தன் இயல்பான நல்லுணர்வைப் பெற்றார் திருமால்.
இவ்வாறு தேவர். மனிதர் முதலிய யாரவது நடுக்கமும் நீக்கியருளியதால் நடுக்கம் தீர்த்த பெருமாளாக (கம்பஹறேஸ்வரர்) வீற்றிருந்து வணங்குவோர் அனைவரின் நடுக்கத்தையும் தீர்த்து நலமடையச்செய்து சரபவடிவாகவும் வீற்றிருந்தருள வேண்டும் என வரம் பெற அவ்வாறே இத்தல சிவபெருமானுக்கு கம்பஹரேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
பாண்டியர் திருப்பணி
வரகுணபாண்டியன் பிரம்ஹத்தி தோஷம் பிடித்து துன்புற்று திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமாளை வழிபட்டு தோஷம் விலகப்பெற்றான். ஆனாலும் பிரமஹத்தியால் ஏற்பட்ட நடுக்கம் தீர்ந்தபாடில்லை. பின் திரும்பி வரும் போது திருபுவன எல்லையில் நடுக்கம் தீர்ந்ததை உணர்ந்தான். காரணம் அறிந்ததும் கம்பஹரேஸ்வரர் மீது மிகுந்த பக்திக் கொண்டு இக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தான். யாழி முகமும் எட்டுக்கால்களும் 4 கைகளும் இறக்கைகலும் கொண்டு விளங்குகின்ற ஸ்ரீ சரபர் தம்மைவணங்கு வோரின் பகை, பிள்ளைக்குறை, பில்லி, சூனியம், பயம் விவாகத்தடை, ஆகியவற்றை நீக்கி அருள் புரிகிறார்.
பக்தர்கள் ஞாயிறு, வெள்ளிக்கிழ்மைகளில் இராகு காலத்தில் சரப முர்த்தியை வழிபாடு செய்கின்றனர். நீங்களும் ஸ்ரீசரபமூர்த்தியை தரிசிக்க வேண்டுமா?
இத்தலம் கும்பகோணத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் திருவிடைமருதூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

Comments
Post a Comment