தேரும் போரும்

திரு.பி.ஆர்.சந்திரன் அவர்கள் எழுதியுள்ள தேரும் போரும் என்ற நூலில் பக்கம்
454ல் வரிகள் 6 முதல் 20 வரை எழுதப்பட்டுள்ள வரலாறு வருமாறு.....

       "முதலாம் மழவராயனின் தங்கை செம்பியன் மாதேவி கண்டராதித்த சோழனின்(கி.பி.955) மனைவி(பட்டத்தரசி) ஆவார். கண்டதேவி முதலாம்
பல்லவராயனும் சோழ மன்னன் இராஜாதி ராஜன் மகளைத் திருமணம் செய்
திருந்தார். இந்த இரு மன்னர்களும்(பல்லவராயனும் மழவராயனும்) இராட்டி
ரக்கூடர்கள் சாளுக்கியர்கள் ஆகிய இருவரும்  சோழநாட்டிற்கு எதிராக தொடுத்த
போர்களை எதிர்த்து போரிட்டு அவ்விரு பகை அரசர்களையும் துரத்தி
யவர்கள்.

       வடக்கே கொப்பம் என்ற இடத்தில் நடந்த போரில்  இராஜாதிராஜனும் பெருமான் நம்பி பல்லவராயனும் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தனர்.
(கிபி.1170). இதனால் மனம் தளராத போர்த்தளபதி மழவராயன், வீரமரணம்
அடைந்த சோழ வேந்தன் இராஜாதிராஜனின்  உடன் பிறந்த தம்பி இரண்டாம்
இராஜேந்திரனுக்கு அப்போர்க்களத்திலேயே சோழ வேந்தனாக முடிசூட்டி
சோழர் படைவீரர்களை உற்சாகப்படுத்தி ..சோழர் போர்ப்படைக்கு தலைமை
யேற்று, சாளுக்கியர்களை புறமுதுகிட்டு போர்க்களத்தைவிட்டே ஓடச்செய்து
மழவராயன் வெற்றி வாகை சூடினான்.

         போர்க்குடிகளின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவன் மழவராயன்.
சாளுக்கியப் போரில் உடன் பிறந்த அண்ணனின் வீர மரணத்திற்குப்பிறகு
தோல்வி முகம் கண்டிருந்த அதே போர்க்களத்தில் தனக்கு முடிசூட்டி சோழர்
படையை உற்சாகப்படுத்தி, தோல்வியையே வெற்றியாக மாற்றிய தளபதி
மழவராயனைப் பாராட்டி, இரண்டாம் இராஜேந்திர சோழன் ..அம்மழவராயனுக்கு..
மழவச் சக்கரவர்த்தி என்ற பட்டமளித்து  நாடும் அளித்து பாராட்டினார். (ஆதாரம்..
ND.Vol.XX.1. NO.31 I.N.S. 427, 435"

       இவ்வாறு இந்நூலில் எழுதியுள்ளார். இது போன்றே சுமார் 2000 பட்டங்களை
கள்ளர்கள்..போர்க்களங்களில்..வீர பராக்கிரம போர்ச் செயல்களில் புரிந்து
வெற்றி வாகையை தன் வேந்தனுக்குப் பெற்றுத் தந்து...பட்டப் பெயர்களைப்
பெற்றுள்ளனர்.  இப்பட்டப் பெயர்களை திராவிடக் கட்சிகள் அழிக்கின்ற செயல்
களில் ஈடுபடலாம்.  எனவே, கள்ளர், மறவர், அகமுடையார்..ஆகியப் போர்க்குடிகள்
தங்கள் பட்டப் பெயர்களை இழந்துவிடாமல் எச்சரிக்கையாக விழிப்புடன் இருக்கு
மாறு இருகரங்கள் கூப்பி வேண்டுகின்றேன். நம் விருதுப் பெயர்களை அழிக்க
விரும்பும் அரசியல் கட்சிகளை விட்டு விலகுங்கள்...எச்சரிக்கை..எச்சரிக்கை..

                          அன்புடன்...உங்களோடு சேர்ந்த போர்க்குடி மரபினனான மழவராயன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்