#கள்ளர் #அழகர் #மதுரை






கள்ளரே கடவுளாக ,கள்ளரின கடவுளாக, கள்ளர் அழகர் கோவிலில் கள்ளர்களுக்கு பரிவட்டம் கட்டையில் பதினெட்டாம் படி கருப்பர் கோவிலில்  பதினெட்டாம்படியில் நின்று உறுமொழி சரியாக செயல்படுவேன் என கள்ளர் அழகர் பதினெட்டாம் படி கருப்பருக்கு  உறுதிமொழி கொடுக்க வேண்டும் ! பரிவட்டம் கட்டுபவர் பொய் கூறினால் சரியாக மூன்றாம் நாள் இறந்துவிடுவார்! இதே நடைமுறையில் வேறுஒருவர் பொறுப்பேற்க வேண்டும்!

கள்ளர்களின் தலைமை கோவிலான கள்ளர் அழகர் கோவிலில் அழகர் விஷ்ணுவாக பாளிக்கிறார் இவர் மீனாட்சியின் சகோதரர் ! மீன்களை போன்ற அழகிய கண்களை உடைய மீனாட்சி பாண்டிய மன்னனின் அழகிய மகள் சிவனை மணப்பதால் இங்கு பிராமணத்துவம்,திராவிடமாக மாறுகிறது!

கள்ளர் ஆற்றில் இறங்குவதை அக்காலத்திலேயே சுமார் 3 லட்சம் பக்தர்கள் கண்டு களித்துள்ளனர் அம்மூன்று லட்சம் பேர்களில் கள்ளர்களே அதிகம்!

கள்ளர் அழகரை தூக்கிசெல்ல,வடம் பிடிப்பது முழுக்க முழுக்க கள்ளர்களே அதன்பின்பே மற்ற சாதியினர் இணைகின்றனர்!

கள்ளர்கள் தங்கள் தெய்வத்திற்கு இரத்த காணிக்கையாக கிடாய் வெட்டுதல், கோழி அறுத்தல் போன்ற பழக்க வழக்கங்களை கொண்டவர்கள் !
பிராமணத்துவத்தால்தான் கள்ளர் அழகர் சைவமாக மாற்றப்பட்டுள்ளார்! சைவமும் கள்ளர்களுக்கு உரித்தானது அல்ல சாத்தான்களை வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் கள்ளர்கள்!

களரி ஆயுதமானது கள்ளர்களால்  பயன்படுத்தப்படுகிறது! சில கள்ளர் திருவிழாக்களில் கள்ளர்கள் தங்கள் வளரிகளை பரிமாறிக்கொள்வதும் நடந்துள்ளது! களரி பொதுவாக துணிச்சலான வேட்டை சமூகங்களால் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஆகும்!
இங்கே அழகரும் மதுரைக்கு வருகையில் கள்ளர்கள் பயன்படுத்தும் வளரிதடி,கடுக்கன்,தடி,தலைப்பாகை போன்றவற்றை அணிந்தே வருகிறார்!

அழகர் கோவிலில் பலிகொடுக்கும் முன்பாக வெள்ளை மற்றும் சிகப்பு பூக்களை போட்டு சிறுவர்களை அழைத்து எடுக்க வைக்கிறார்கள் அதில் வெள்ளையை எடுத்தால் வெற்றி என்பது அர்த்தம்!

ஆகவே அழகர் ஆற்றில் இறங்கும்  விழா என்பதை விட  கள்ளர் அழகர்  ஆற்றில் இறங்கும்  விழா கள்ளர் திருவிழா என்பது சாலச்சிறந்தது!

#கள்ளர் #அழகர் #மதுரை

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்