கள்ளழகர்

தெரியுமா!

1650க்கு முன்பு வரை கள்ளழகர் சித்திரை மாதத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கவில்லை.

#சோழவந்தான் அருகிலுள்ள #தேனூர் வைகையாற்றில் தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுந்தருளி வந்தார்.

1650 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலை நாயக்கர் சைவ, வைணவத்தை ஒன்றினைக்கும் விதமாகவும், நிர்வாக காரணங்களுக்காகவும்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துடன் அழகர் ஆற்றில் இறங்கும்  விழாவையும் இனைத்து மதுரைக்கு மாற்றினார்.

அதற்கு முன்பு வரை கள்ளழகர், அழகர் மலையிலிருந்து கிளம்பி அலங்காநல்லூர், சோழவந்தான், #திருவேடகம் வழியாக தேனூர் வைகையாற்றில் இறங்கி வந்தார்.

இவ்விழா மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு கள்ளழகர் தல்லாகுளம் வழியாக வரத் தொடங்கினார்.

இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது.

ஆனால் உண்மையில் மண்டூக மகரிசிக்கும், நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டதை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை,

(இதை ஏற்காமல் இன்றுவரை தேனூரில் ஒரு சமூகத்தினர் அழகர்கோயில் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இதைத் தொடர்ந்து தான் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக மதுரை வைகையாற்றில் அழகர் இறங்குமிடத்தில் #தேனூர் பெயரில் மண்டபம் அமைத்து முதல் மரியாதை செய்ததுடன், மற்றொரு நாளில் தேனூர் அழகுமலையான் கோவிலிலிருந்து தேனூர் வைகையாற்றில் இறங்க ஏற்பாடு செய்தும் திருமலை நாயக்கரால் செப்புப்பட்டயம் எழுதி வழங்கப்பட்டது,

கள்ளழகர் மதுரையில் இறங்கும் அதே தினத்தில்  பாண்டியர் கால பழங்கோவிலான #சோழவந்தான் #ஜெனகைநாராயணப்பெருமாள் கள்ளழகராக #சோழவந்தான் வைகையாற்றில் இறங்கும் விழாவும் ஏற்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை 370  ஆண்டுகளுக்கும் மேலாக சோழவந்தான் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு பின்னர் மக்களின் வேண்டுகோளிற்கிணங்க பல பகுதிகளில் இவ்விழா கொண்டாடப்பட்டாலும பிரசித்தி பெற்ற #சோழவந்தான்  #மானாமதுரை மற்றும் #பரமக்குடி யில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்