கள்ளர்_குல_இருக்குவேளிர்

#பிற்கால_சோழ_சாம்ராஜ்ஜியம்*********
[#கள்ளர்_குல_இருக்குவேளிர்...

சோழர் என்ற வார்த்தையை கேட்டாலே உள் நெஞ்சில் இருந்து ஒரு உறுமல் சத்தம் எப்போதும் ஒலிக்கும். அப்படிபட்ட சோழ வரலாற்றை முறையான கல்வெட்டு ஆதாரங்கள் மூலமாக அவர் யார் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் முறையாக தொகுத்து வெளியிட்டுள்ளார்கள்.

ஆனால் சுயநலமிக்க சில கோமாளி சொல்லாறாச்சி மூடர்களால் உண்மை வரலாற்றை தூங்க வைத்து விட்டார்கள்.

அவ்வாறு சோழர் வரலாற்றில் தூங்கிய விடையம் தான் கொடும்பாளூரை ஆட்சி செய்த இருக்குவேளிர் அரச மரபு.

ஆம் மிகவும் வீரமிக்க இந்த இருக்குவேளிர்கள் கள்ளர் குடியை சேர்ந்தவர் என்பது தமிழ் குடி மக்கள் 99%பேர்களுக்கு தெரியாது, ஏன் கள்ளர் குடிமக்களுக்கே தெரியாது.

அப்படிபட்ட கள்ளர் குல கொடும்பாளூர் இருக்குவேளிரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே கொடும்பாளுர் நகரம் ‘கொடும்பை’ (கள்ளர்களின் பட்டப்பெயர்களில் கொடும்புறார் என்று இன்றும் உள்ளது)என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது பழங்காலத்தில் ‘இருக்குவேளூர்’ என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது.

இந்த இருக்குவேளிர் அரச வம்சம் பிற்கால பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலும் கொடும்பாளுர் பகுதியை ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்த பொழுது கொடும்பாளுர் வம்சத்தை சேர்ந்த #செம்பியன்_வளவன் என்பவன் பல்லவனுக்கு உதவியாக போர்ப் புரிந்தான் என்ற குறிப்பு கல்கியின் சிவகாமி சபதத்தில் உள்ளது.

கொடும்பாளுர் இருக்குவேளிர்களுக்கும், பல்லவர்களூக்குக்(கள்ளர்) கீழே சிற்றரசர்களாக இருந்த முத்தரையர்களுக்கும்(கள்வர் கள்வன்), பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் சொந்தம் இருந்திருக்கின்றது. மூவரும் கள்ளர் குடியில் இருந்து கிளைத்தவர்களே......!

எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளிள் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களின் ஆதிக்க போட்டிகள் சோழ மண்டலத்தில் அதிகரித்தன. ஆகவே இருக்குவேளிர்கள் மெல்ல பலத்தை அதிகரித்துக் கொண்டுவந்த சோழர்களுடன் நட்புறவு கொண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டில் (880 AD) திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போரில் சோழர்கள் பல்லவர்கள் உதவியுடன் பாண்டியர்களை முறியடித்த பிறகு கொடும்பாளுர் அரசர்கள் சோழ அரசுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

முதலாம் பராந்தக சோழர் தான் பிற்கால சோழர் சாம்ராஜ்ஜியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். ஏனென்றால் இவர் கிபி907ஆம் ஆண்டு மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனான வறகுண பாண்டியனை வீழ்த்தி சோழர்களின் புலிக் கொடியை கன்னியகுமரி வரை பறக்க விட்டர்.

மதுரையை படையெடுத்து சென்று பாண்டியர்களை வீழ்த்தியது யாரென்றால் பராந்தக சோழரின் முதன்மை தளபதியான கள்ளர் குல தென்னவன் இளங்கோவேள் தலைமையில் வறகுணபாண்டியனின் தலையை கொய்து புலிக்கோடியை குமரி வரை கோலோச்ச வித்திட்டவர்.

பாண்டியனை வீழ்த்திய இருக்குவேளிர் என்பதே தென்னவன் இளங்கோவேள் என்பதாயிற்று....!

அதன்பிறகு கொடும்பாளுர் இருக்குவேளிர் வம்சம் திருமண உறவுகள் மூலம் சோழ அரசுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொண்டனர். கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் மகள் #கள்ளன்ஆதிச்ச_பிடாரி(கொற்றவையை குறிக்கும் சொல்)என்பவளைப் முதலாம் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பின்பு கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் சோழர்களுடன் முழுமையாக கரைந்து விட்டார்கள்.

இதேபோல் இராஜ இராஜ சோழரின் வீரமிக்க தளபதியான விழுப்பரையர் கள்ளர் என்பதை நான் ஏறகனவே பதிவு செய்திருக்கிறேன்.

#கள்ளன்_மழைனாட்டு_விழுப்பரையன்
#கள்ளன் பெரிய தேவன்
#கள்ளன் பெருமாள்
#கள்ளன் சீராளத்தேவன்

#சோழ_நாடாள்வார்கள்

கானவன் சேந்தன் கள்ளன்
அரையன் கள்ளன் சேந்தன்
கள்ளன் பாப்பன் சேந்தன்

சோழர்கள்

ஶ்ரீகள்ளச் சோழன்
ஶ்ரீகள்வன் இராஜ இராஜன்

இதுபோக #காங்கேயர் மன்னரின் மகள் #கள்ளநங்கை என்பவர்களும் கள்ளர் குலத் தோன்றல் என்பது தனி வரலாறு....! அதை விரிவாக பதிவிடுகிறேன்.

இப்பதிவில் உள்ள அரச பெயர்களும்,கள்ளர் பட்டங்களும்:-

செம்பியர்
கொடும்புறார்
இருங்கோளார்
வங்கார முத்தரையர்
செம்பிய முத்தரசு
காங்கேயர்
சோழகர்
சோழங்கராயர்
தென்னவர்
பாண்டிய ராயர்
நாட்டார்
சோழ நாட்டார்

#ஆயிரம்_கைகள்_மறைந்தாலும்_சூரியகுலத்துசோழர்_வரலாறு_மறையாது

#சோழர்_பயணம்_தொடரும்

நன்றி
சோழர்கள் வரலாறு போற்றுதலுக்குரிய ஐயா நீலகண்ட சாஸ்த்திரி
மற்றும் தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்