உண்மையான அறிவியல்

🐓ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்...

🐓விடியற்காலையில்
சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்கு
என்று அர்த்தம்.
கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்.

🐓சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிளறி அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.

🐓மண்ணை கிளறி புழு கிடைக்கவில்லை என்றால்
அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

🐂ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம்.

🐂அப்படி அவை படுக்கும்
இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

💊அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி
காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.

👑ஆனால் இயற்கையை
கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.

👑கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் எங்கள் பாட்டன், பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விசயங்களை...

துரை சரவணன் மூவை விவசாயி மகன்i

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

திருவண்ணாமலை மலை ஒரு எரிமலை