நாகர்கள்

#நாகர்கள் என்பவர்கள் யார்??

      இந்திய வரலாற்றில் , புராணங்களில் அடிக்கடி கேள்விப்படும் பெயர் தான் #நாகர் இனம் . நாகர்கள் பற்றிய பல்வேறு கதைகளும் கட்டுக்கதைகளும் உண்டு. அதனால் நாகர்களை பற்றிய விவரங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன . ஆயினும் நாகர்கள் பற்றிய தெளிவான விவரங்களையும் பார்ப்போம். 

      நாகர்கள் என்பவர்கள் இந்திய தேசத்தின் பூர்வ குடிகள் . #திராவிட , #ஆரிய கூற்றுக்கள் உண்மை என்றால் நாகர்களே பூர்வகுடி மக்கள் .  உலகில் பல்வேறு நாடுகளில் #நாகா என்ற பெயர்களில் பூர்வ குடி மக்கள் இருக்கிறார்கள் . அவர்கள் வேறு இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள நாகர்கள் வேறு.  நாகர்களை நகரத்தாரோடு (செட்டியார்) தொடர்பு படுத்தி ஆய்வு செய்திருக்கிறார்கள் . செட்டியார்கள் தமிழருக்கும் நாகர்களுக்கும் இடையில் வாணிபம் செய்து வந்தனர் . நாகர்களும் தமிழர்கள் தான் வேறு இனம் கிடையாது.

     சைவர் , வைணவர் , நாகர் இது தான் மிகச்சரியான கூற்று . "சிவனை வழிபட்ட தமிழர் சைவராகவும் , விஷ்ணுவை வழிபட்டோர் வைணவராகவும் , நாகத்தினை வழிபட்டோர் நாகர்கள்" என்ற பிரிவின் பெயரால் அழைக்கப்பட்டனர் . சைவரும் , வைணவரும் ஒரே தேசத்தில் கலந்து இருந்தனர் . நாகர்கள் தனியாக இருந்தனர் .  நாகர்களுக்கு தனிக் கோட்பாடு எல்லாம் கிடையாது.  சைவம் , வைணவம் இரண்டையும் அவர்களின் நாக வழிபாட்டு கலாச்சாரத்தோடு சேர்த்து வழிபட்டனர் . அவர்கள் வழிபடும் சிவனின் தலையில் நாகம் குடை பிடித்து இருக்கும் , அது போலவே அவர்களின் விஷ்ணுவின்  படுக்கையே நாகம்  . கொற்றவை , முருகன் என பல கடவுள்களின் வழிபாட்டிலும் நாகங்களை வைத்து வணங்கினார்கள் .  மேலும் நாகர்கள் #வேட்டுவகுடியினராய் இருந்தனர் . நாகப்பட்டினம் , நாகர் கோவில் , நயினார் தீவு , இலங்கை போன்ற இடங்கள் நாகர்களின் ஆட்சிக்கு உட்பட்டதாய் இருந்தது. நாகர்களில் தலைவர்கள் அரசர், அரசிகளாய் இருந்தாலும் பின் வரும் சந்ததிக்கு தேவையான அடையாளைங்களை விட்டுச் செல்லவில்லை.  நாகர் இனப் பெண்களை அரசர்கள் மணந்தாலும் அவர்களுக்கு பட்டத்து ராணி என்ற அந்தஸ்து கொடுத்ததில்லை. #நாகலோகம் என்பதெல்லாம் தனி உலகமல்ல . தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்த சில தீவுகளில் நாகர்கள் வாழ்ந்தனர் . வனவாசிகளாய் பெரும்பாலும் அவர்கள் இருந்ததால் நாக நாட்டின் மீது போர்கள் தொடுக்கப்படுவதில்லை. வனத்தில் இருந்ததால் தான் நாக வழிபாட்டையும் மேற்கொண்டிருந்தனர் .

  சோழன் நெடுங்கிள்ளியின் காதலி பீளிவளை இருந்த #மணிபல்லவ_தீவு தமிழகத்தின் அருகாமையில் இருந்த தீவு தான் .  இலங்கையில் நாகர்கள் சற்றே நாகரிகம் பெற்று அரசாண்டனர் .#முடி நாகர்கள் என்ற பெயரில் அரசாட்சி புரிந்தனர். நேபாளத்திலிருந்து இலங்கை வரையிலும் நாகர்கள் பரவி இருந்தனர்.  சந்திர வம்சத்தினர் வட இந்தியாவை முழுவதும் ஆள நாகர்கள் தென் திசைக்கு வந்துவிட்டனர் . ஆரியர்- நாகர் பகை பற்றி கதைகள் உண்டு. மன்னர் பரிட்சித்துக்கும் நாகர் இனத்திற்கும் தீராப்பகை இருந்தது . வட இந்தியர்கள் பகையினால் நாகர்களை மனிதர்களாக சித்தரிக்காமல் நாகங்களாக சித்தரித்தனர் . புத்தர் சூரியவம்ச - நாகர் கலப்பில் வந்தனர். இளந்திரைய  தொண்டைமான் அரசன் சூரியவம்ச - நாகர் கலப்பில் தோன்றியவன் . நாகர் இளவரசிக்கு பிறந்ததால் அவருக்கு சோழர் பட்டம் கிடைக்கவில்லை . தமிழ் இனமான நாகர் இனம் அழியவில்லை . தமிழ் மக்களோடு கலந்து விட்டனர். அதன் விளைவு தான் நாகலிங்கம் , நாக விஷ்ணுகள் எல்லாம்.  மற்றபடி நாகர்களுக்கும் நாகலாந்து மக்களுக்கும் சம்மந்தம் இல்லை . நாக நாடு என்பது இலங்கை தானே தவிர இந்தோனேசியா அல்ல.  நாகர்கள் தமிழர்கள் , மங்கோலிய கலப்பினத்தனர் கிடையாது..

#சோழர்களின்_தேடல்_தொடரும் 🐅 🐅 🐅 🐅

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்