பரத நாட்டியம்

# பரத நாட்டியம் #

சோழநாட்டுக்கோவில்களில் தேவதாசிப்பெண்கள் ஆடிய 'சதிராட்டம்' தான் தற்போது நவீனவடிவத்துடன் ஆடப்படும் பரதநாட்டியம்...பரதம் என்ற சொல் பாவம்.ராகம்.தாளம்.மூன்றும் கலந்தது.மாமன்னன் இராசராசன் காலந்தொட்டு சிறப்பாக நடைபெறுகிறது.தஞ்சை பெற்றெடுத்த தங்கம் "பால சரஸ்வதி" பரதநடனத்தை மெருகேற்றியவர்...
சென்னையில் கலாட்சேத்ரா என்ற அமைப்பை உருவாக்கி இன்றுவரை பல ஆளுமைகளை உருவாக காரணமானவர் "ருக்மணி தேவி அருண்டேல்" ஆவர்..
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது.தஞ்சை விமானத்தின் உட்புறம் 108 கரணசிற்பங்ககள் அமைக்க எண்ணி 80 சிற்பங்கள் முழுமையாக செதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர்  ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும்  அணிந்திருப்பார்.

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.
பத்மா சுப்ரமணியன்.சித்ரா விஸ்வேஸ்வரன்.சொர்ணமால்யா.ருக்மணி.திருநங்கை நர்த்தகி நட்ராஜ் ஆகியோர் உலகில் பல இடங்களில் சென்று இக்கலையைப் நிகழ்த்தி புகழ் பெற்றுள்ளனர்💐💐

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்