Skip to main content

குருபூஜைவிழா


குருபூஜைவிழா  - ஜெயந்தி விழா ?

குருபூஜைவிழா  -

தேவர் திருமகன் மதுரையில் மரணமடைந்தபோது அவரது உடல் பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது .அங்கு வல்லநாட்டு சித்தர் கரங்களால் இந்து சமய முறைப்படி இறுதிசடங்குகள் நடைபெற்றது .பின்பு பசும்பொன் தேவர் வீட்டின் முன்பாக பத்துக்கு பத்துஅடி நீள அகலமுள்ள குழி வெட்டப்பட்டு  அதில் வேப்பிலை திருநீறு சுக்கான் போன்ற பதினெட்டு வகையான மூலிகைகள் பரப்பப்பட்டு தேவரின் உடல் பத்மாசனநிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அடக்கம்செய்யப்பட்டது .

அதிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மண்டலம் 41 நாட்கள் விளக்குபூஜை நடத்தப்பட்டது .மேலும் சித்தவித்தையில் உள்ளவர்களுக்கு நைஸ்டீக பிரம்மச்சாரியாக [ தூக்கத்தில் கூட தன்னிலை தவறாதவர்கள் நைஸ்டீக பிரம்மச்சாரிகள்] வாழ்ந்தவர்களுக்கு அவரது சீடர்களால் நடத்தப்படும் பூஜையே "குருபூஜையாகும் "

இல்லறவாழ்வில் ஈடுபட்டவர்கள் கிருஸ்தவமதத்தை சேர்ந்தவர்கள் கள்ளக்காதலில் வெட்டுப்பட்டு செத்தவர்களுக்கெல்லாம் குருபூஜை நடத்தும்  அக்கிரமம் இங்குதான் அரங்கேறுகிறது .

ஜெயந்தி விழா -

 இந்திய நாட்டின் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்தி பிறந்த தினத்தை அவரை பின்பற்றுபவர்கள் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடினர் .

அதே காலத்தில் வாழ்ந்த காந்திக்கு நிகரான தலைவராக கருதப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை அவரை பின்பற்றியவர்கள் நேதாஜி ஜெயந்தி என்று கொண்டாடினர் .

அவரின் நெருங்கிய சகோதரனாக விளங்கிய தேவர் திருமகன் தனது வாழ்நாள் முழுவதும் நேதாஜி ஜெயந்தியை கொண்டாடி வந்தார் அதன் அடிப்படையில் தேவரை பின்பற்றுபவர்கள் தேவரின் பிறந்தநாளை தேவர் ஜெயந்தியை என இன்றுவரை கொண்டாடிவருகின்றனர் .

Comments

Popular posts from this blog

வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ