சிவலிங்கம்
தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப்பெரியது.அதற்கு ஆதி சைவரைக்கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்வித்த போது மருந்து இளகிப் பந்தனம் ஆகவில்லை.ராஜராஜன் மனம் நொந்தான்.அது சமயம் சைவ முனிவரான கருவூர்த்தேவர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்த்து செவ்வனே பந்தனம் செய்வித்தார் என கருவூர் புராணம் சொல்கிறது.இக்கருவூரார் தஞ்சைப்பெரிய கோயிலின் மீது பதிகம் பாடியுள்ளார்.அப்பதிகம் ஒன்பதாம் திருமறையில் இடம் பெற்றுள்ளது.
Comments
Post a Comment