இளஞ்சேட் சென்னி
கரிகால் சோழனின் தந்தையான சோழப் பேரரசன் இளஞ்சேட் சென்னி மௌரியப் பேரரசன் அசோகனின் படைகளை முறியடித்து விரட்டினான்.அதுவே செருப்பாழிப்போர் ஆகும்.சோழ நாட்டு எல்லையிலேயே மௌரியப்படைகள் பல முறை நைய்யப்புடைக்கப்பட்டன.சேரப்படைகளும் பாண்டியர் படைகளும் சோழருக்கு உதவின.இளஞ்சேட்சென்னி மௌரியப்படைகளைஅவர்கள் மீண்டும் தமிழகம் திரும்பாதபடி துளுவ நாட்டிற்கே துரத்திக்கொண்டு சென்றான்.துளுவ நாட்டிலேயே மௌரியர் தடம் அழியும் வரைப் போரிட்டான்.பாழிக்கோட்டை தரைமட்டம் ஆக்கப்பட்டது.செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியின் பெரும்புகழ் இளையன் சேந்தன் கொற்றனாரால் பாடப்பட்டுள்ளது..........."எழு உத்தினி தோள் சோழர் பெருமகன்.......விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ்சென்னி.......குடிக் கடனாகலின் குறைவினை சென்னி.......செம்புறழ் புறிசை பாழி நூறி.......வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.......கொன்ற யானை......."தமிழகத்தைப் போரால் வெல்லமுடியாது என்று உணர்ந்த அசோகன் சமயபோர்வையில் உள்ளே நுழைய முற்பட்டான்.பௌத்த, சமண மதத்தினரை அனுப்பி வைத்தான்.
Comments
Post a Comment