சுந்தர சோழன்
கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டான். இதனால் துயருற்ற மன்னன் நோயுற்று கி.பி 973 ல் காலமானான்.
சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன் சோழ நாட்டுக்கு அரசனானான்.
காஞ்சிபுரத்தில் பொன்னாலான தன்னுடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். சுந்தர சோழன் இறந்த போது அவன் மனைவியருள் ஒருவரான வானவன் மாதேவி என்பவள் பால் குடி குழ்ந்தை ஒன்றை விட்டு விட்டு தன் கணவனுடன் எரிமூழ்கினாள்".முலைமகப்பிரிந்து முழங்கு எரி நடுவனும்............தலை மகற் பிரியா தையல்" .என்று அந்நாளையக் கல்வெட்டுக்கள் அவர் உயிர் மறுப்பைப் புகழ்கின்றன.இவ்வீர அரச நங்கையே மாவீரன் ராஜராஜனை ஈன்ற மாதேவியாவாள்.தஞ்சைப்பெருவுடையார் கோயிலில் முதலாம் ராஜ ராஜ சோழனால் அவன் தாய் தந்தையரான சுந்தர சோழன்,அரசி வானவன் மாதேவி ஆகியோரின் படிவங்கள் நிறுவப்பட்டுள்ளன.வீர சோழிய உரை மேற்கோள் செய்யுளான கலிப்பா ஒன்று சுந்தர சோழனின் வண்மையைப் புகழ்ந்துள்ளது."போதியந்திரு நிழல் புனித !!! நிற்பரவுதும்..........மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச்..........சோழர் வண்மையும் வனப்பும்..........திண்மையும் உலகில் சிறந்து வாழ்க எனவே".

Comments
Post a Comment