ஜெய் ஸ்ரீராமஜெயம் !!

*ஸ்ரீ ராமஜெயம்*

*முதலில் எழுதியது யார்..!?*


போரில் ராவணனை வீழ்த்திய ராமர், இந்த நல்ல செய்தியை யார் சீதையிடம் சென்றுக்கூறுவது என்று யோசிக்கும்பொழுது, 


நான் நீ என்று பலர் முன்வந்தார்கள். ஆனால் ராமரோ ஆஞ்சநேயர்தான் இதற்குச் சரியான ஆள் என்று அனுமனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார் !


ராமரின் ஆணையை சிரமேற்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சநேயருக்கு, சந்தோஷ மிகுதியால்  பேச முடியவில்லை. 


கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இதைக் கண்ட சீதைக்கோ ஏன் அனுமனின் கண்களில் கண்ணீர் என்ற கவலை !


இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன், சந்தோஷத்தில் வாய் பேச முடியவில்லை என்றால் என்ன, 


ராமர் வெற்றி பெற்ற நற்செய்தியை எழுதி காண்பிக்கலாமே என்று 


*"ஸ்ரீ ராமஜெயம்"* என்று மண்ணில் எழுத, அதைப்படித்த சீதாப்பிராட்டியாரும் செய்தியறிந்து சந்தோஷமடைந்தார்...!


*ஜெய் ஸ்ரீராமஜெயம் !!

 

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்