மும்முடிச் சோழர் ராஜராஜசோழன்

மும்முடிச் சோழர் ராஜராஜசோழன்
இந்தத் திருப்பெயரைக் கேட்டாலே தமிழர்களின் நெஞ்சம், பெருமித உணர்வால் நிறையும். "செயற்கு அரிய செய்வார் பெரியர்' என்று பெருஞ் சாதனையாளர்களுக்கான இலக்கணத்தை வகுத்தார் திருவள்ளுவர். அவ்வகையில் பல அரிய சாதனைகளை நிகழ்த்திய பெரியோன், ராஜராஜசோழன் ஆவார்.
தனது ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்ய எல்லைகளை விரிவுப்படுத்திப் பெரியதாக்கினார். பெரும் வீரனாக விளங்கினார்! இன்றளவும் உலகமே வியக்கும் அளவு மிகப் பெரிய சிவாலயத்தை தஞ்சையில் உருவாக்கினார். வடமொழி, தென் மொழி வல்லுநர்களை ஆதரித்த பெரிய மனம் படைத்தவராக விளங்கினார். பெருவுடையார் கோயிலில் மிகப் பெரும் கருவறை விமானத்தை அமைத்தார். பிரம்மாண்டமான பெரிய லிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்தார். தனது குருநாதராகிய கருவூர் தேவரிடம் பெரும் பக்தி உடையவராகத் திகழ்ந்தார்.
முடியாட்சியிலும் "குடவோலை' முறையில் தக்கோரைத் தேர்வு செய்த சீர்திருத்தப் பெரியவராய்த் திகழ்ந்தார். சைவத் திருமுறைகளில் பெரும்பற்று கொண்டிருந்தார். தில்லையில் இருந்த தேவாரப் பதிகங்களை ராஜராஜ சோழ மாமன்னர் மீட்டெடுத்தார் என்றொரு கர்ண பரம்பரைக் கதையுண்டு. ஆனால் இதைச் சில அறிஞர்கள் மறுத்துரைக்கின்றனர். எது எவ்வாறாயினும், தான் கட்டிய சிவாலயத்தில் தேவாரப் பதிகங்கள் பாட நாற்பத்தெட்டு ஓதுவார்களை இம்மாமன்னர் நியமித்ததாகக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது. இதனால் இவர் பெரும் சிவ பக்தர் என்பதும் நிரூபணமாகிறது.
அரசியல், ஆன்மீகம் தாண்டி கலைகளை வளர்ப்பதிலும் பேரார்வம் காட்டியவர் ராஜராஜ சோழன். முத்தமிழில் மூன்றாம் தமிழான நாடகக் கலையையும் வளர்ப்பதில் பெரு விருப்பம் காட்டினார் இப்பேரரசர்.
பெருவுடையார் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நானூறு வீடுகளைக் கட்டி, "தளிச்சேரி பெண்கள்' எனப்பட்ட நாட்டிய நங்கைகளைக் குடியமர்த்தினார். இந்தப் பகுதிகளுக்கு "தளிச்சேரிகள்' எனப் பெயரிட்டு, பரத நாட்டியக் கலையை ஊக்குவித்தார்.
இவ்வாறு பற்பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போக ஆதாரங்கள் நிறையவே உள்ளன. மொத்தத்தில் செயற்கரிய பெரும் சாதனைகளைப் படைத்த பேரரசர் ராஜராஜ சோழன் என்பதில் ஐயமே இல்லை.

மக்கள் தலைவர்!
பராந்தக சுந்தர சோழரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ராஜராஜன். இவரது இயற்பெயர், "அருள்மொழி வர்மன்' என்பதாகும். அன்றைய அரசியல் முறைப்படி இவரது அண்ணனாகிய, "இரண்டாம் ஆதித்தன்' என்பவரே பட்டத்து இளவரசராக இருந்தார். ஆதித்தனும் வீரத்தில் சளைத்தவரல்லர்! அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட வீரபாண்டிய மன்னரின் தலையைப் போர்க் களத்தில் ஆதித்த சோழர் கொய்ததாக வரலாறு கூறுகின்றது. பின்னர் இவர் வீரபாண்டியனின் மெய்க்காப்பாளர்களால் கி.பி. 969ல் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்கின்றனர். அதன் பின்னர் தனது மகளான குந்தவை பிராட்டியாரிடமும், மூன்றாவது மகனான அருள்மொழி வர்மனிடமும் பெரும் நம்பிக்கை வைத்து வாழ்ந்தார் சுந்தர சோழர். "சோழ சாம்ராஜ்யத்தின் எதிர்காலமே அருள்மொழியால் வளப்படும்' என்றவர் உறுதியாக நம்பியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக கண்டராதித்த சோழரின் மகனான உத்தமசோழர் என்பவர் வசம் சோழ நாட்டை ஒப்படைக்கும் சூழ்நிலை உருவானது. "ராஜராஜனை அரசாளும் மோகம் ஆட்டிப் படைக்கவில்லை' என்றே அவரது வரலாற்றினை நுட்பமாக ஆராய்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் காலம், அவரை தலைமை ஏற்க வைத்தது.
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். சுந்தர சோழரின் மூத்த மகனான ஆதித்த சோழரும் - கண்டராதித்த சோழரின் வாரிசான உத்தம சோழரும் வாழ்ந்த காலத்திலேயே அருள்மொழி வர்மருக்கு, மக்கள் செல்வாக்கு மகோன்னதமாக இருந்தது. அருள்மொழி வர்மரை "திருமாலின் அவதாரம்' என்றே அன்று சோழ அரசின் குடிமக்களில் பெரும்பாலானோர் கருதினர். திருவதிகையில் கிடைத்த கல்வெட்டொன்று, ""அருள்மொழியின் அங்கத்தில் காணப்படும் "சாமுத்ரிகா லட்சணங்கள்' அவரை மூவுலகும் ஆளும் திருமாலின் அம்சம் என்பதைத் தெளிவுப்படுத்துவதாய் உள்ளன'' என்றும் கருத்துபடப் பேசுகின்றது.
மக்களின் மகத்தான ஆதரவினால் சோழ சாம்ராஜ்யத்தின் அரசராக முடி சூட்டிக் கொண்டார், அருள்மொழி வர்மர் என்னும் முதலாம் ராஜராஜ சோழன். மக்கள், தன் மீது காட்டிய பேரன்பை மனதில் கொண்டே "குடவோலைத் தேர்தல்' முறையைத் தனது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தினார் போலும் இந்தப் பேரரசர்!---------------------------
மா மன்னன் இராசராச சோழன்
இயற்பெயர் - அருண்மொழித்தேவன் (அருண்மொழிவர்மன்)
பிறந்தநாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் .
கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது.
(உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)
இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
சிறப்புப் பெயர்கள் - 42
1. இராசகண்டியன்
2. இராசசர்வக்ஞன்
3. இராசராசன்
4. இராசகேசரிவர்மன்
5. இராசாச்ரயன்
6. இராசமார்த்தாண்டன்
7. இராசேந்திரசிம்மன்
8. இராசவிநோதன்
9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்
தாய் தந்தையர் - வானவன் மாதேவி, சுந்தரசோழன்
உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (தமக்கை)
மனைவியர் - 15
மக்கள்
இராசராச சோழனுக்கு இராசேந்திரன், எறிவலி கங்கைகொண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்காமாதேவியார், இரண்டாம் குந்தவை என்னும் மூன்று பென்மக்களும் இருந்தனர். எறிவலி கங்கைகொண்ட சோழன் இராசேந்திர சோழனின் தம்பியாவான். ( 30 கல்வெட்டுகள் பக்கம் 29,59. வை.சுந்தரேச வாண்டையார் கல்வெட்டு ஆராய்சிக் கலைஞர்.மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.)
இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.
அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
(இராசராசன் கி.பி.985 ஜுன் 25ம் நாள் அரசு கட்டில் ஏறினான்)
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
(இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்)
முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன.
வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்
ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்
முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014கேரளாந்தகன் 29. மூர்த்தவிக்கரமாபரணன் 30. சோழேந்திரசிம்மன் 31. சோழநாராயணன் 32. சோழகுலசுந்தரன் 33. சோழமார்த்தாண்டன் 34. பாண்டியகுலாசனி 35. சிவபாதசேகரன் 36. சிங்களாந்தகன் 37. சத்துருபுஜங்கன் 38. சண்டபராக்ரமன் 39. ஜனநாதன் 40. சத்திரியசிகாமணி 41. கீர்த்திபராக்கிரமன் 42. தைலகுலகாலன் தாய் தந்தையர் - வானவன் மாதேவி, சுந்தரசோழன் உடன் பிறந்தோர் - ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை) மனைவியர் - 15 மக்கள் இராசராச சோழனுக்கு இராசேந்திரன், எறிவ வயது - 42ம் வயது தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை கும்பாபிசேசம் செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்) இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி) (இராசராசன் இறந்த தினம் - 17/01/1014. தனது ஆட்சியாண்டு 29ல் மார்கழி பூர்வ பட்சத்தில் சதுர்த்தசி திதியில் இயற்கை எய்தினார்) முதல் திவசம் செய்தது - 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி) முதல் திவசத்தை 6/01/1015ல் பிண்டமளித்து, பின் எட்டு பொற்பூக்களை கேந்திர பாலதேவருக்கு திருவடி சாத்தி முதலாம் ராசேந்திரன் வழிபாடு செய்த இடம் திருவலஞ்சுழி அருகில் உள்ளது. இதற்குரிய கல்வெட்டும் அங்குள்ளது. இராசராச சோழனின் திருவுருவமும், கோப்பெருந்ட்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர்க் கோவிலில் இருக்கின்றன. வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள் ஆட்சிச் காலம் - 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள் முதலாம் இராஜராஜ சோழன். கி.பி 985 முதல் கி.பி 1014.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்