கள்ளர் சரித்திர நாயகன் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
கள்ளர் சரித்திர நாயகன் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.----------------1940
ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமில் மா நாட்டில்நாவலர் என்னும்
சிரப்புபட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய
உரைகள், தமிழ் ஆராச்சி நூல்கள் பல. 1921 -22 இல் திருவருட் கல்லூரி
ஒன்ற்றுநிறுவ முயற்சி செய்து நிறைவேறாமல் போக , 1925 - 26 இல் தஞ்சை அல்லது
திருச்சியில்தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டுமென்று
விரும்பி அப்போதைய அமைச்சர்டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில்
அமைத்த செயற்குழுவில் உறுப்பினராகஇருந்து
செயலாற்றிச் சிற்ப்பித்தார்கள்எளிய வாழ்வும் இனிய நோக்கமும்கொண்டவர்,
நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும் மிக்கவர். சிறந்த புலமையாளர்,
உயர்ந்தபண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றிய நாட்டர்
28-3.1944 அனறு தம் மணி விழா நடை பெறுவதற்கு இருவராத்திற்கு முன்
காலமானார். அன்னாரின் உடல்பிறந்த மண்னணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல்
கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்
இக்காலத்தில் தமிழ் புலவர் ஒருவருக்காகஎழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இதுவே.--------------------------------------------
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் புலவராய் விளங்கிய நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார். புரைதீர்ந்த தமிங்ழப் பெரும் புலமை பெற்றவர். இவர் மாணவர்க்குக் கல்வி போதிப்பதில் ஒப்பற்ற ஊக்கமும் திறமையும் பெற்று விளங்கியவர். சொற்பொழி வாற்றுவதிலும் வல்லவர். இக்கால ஆராய்ச்சியிலும் தேர்ந்து விளங்கினார். நல்லிசைப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை நுண்ணிதின் ஆய்ந்து தனித்தனி நூல்கள் எழுதியுள்ளார். இவரியற்றிய சிலப்பதிகார உரையும், அகநானூறு உரையும் வெளிவந்துள்ளன. செந்தமிழ்(ழை) விளக்கும் பெருந் தொண்டினையே தமது வாழ்வாகவும் வைப்பாகவும் கருதி வாழ்ந்தவர்.
சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம் நாள் (12.4.1884) கள்ளர் குலத்தில் முத்துசாமி நாட்டார் - தைலம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார். இவர் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான். தமிழ் நூற்கடலை நிலை கண்டு உணர்ந்தவர். அன்பும், அடக்கமும், அமைதியும் அணிகலனாய்ப் பூண்ட இப்பெருமகனே பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்.
வேங்கடசாமிக்கு முதலில் இட்ட பெயர் சிவப்பிரகாசம். தொண்டையில் கட்டி ஏற்பட்டு திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட பின் குணமானதால் வேங்கடசாமி என்று பெயர் மாற்றம் பெற்றார். வேங்கடசாமியின் தந்தையார் முத்துசாமி நாட்டார், தமிழ் இலக்கியப் பயிற்சி உடையவர்.
அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்துவிட்டு தந்தையாரோடு சேர்ந்து வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நல்ல கல்விமானான தந்தையாரைத் தேடிவரும் அறிஞர்கள் பலரையும் மதித்துப் பழகிய இளைஞர் வேங்கடசாமி, தன் இல்லத்துக்கு வந்த சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரால் ஈர்க்கப்பட்டு அவரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் பாண்டியன் புத்தகசாலை என்னும் நூல் நிலையமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை என்னும் தமிழ்க் கல்லூரியும் செந்தமிழ் என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன. இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது. இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு எழுதினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார்.
ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி கல்லூரியில் 1908 -1909 வரை ஓராண்டும், 1910 முதல் 1933 வரை 23 ஆண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார். நாட்டார் திருச்சியில் இருந்தபோது, பாரதியார் இவர் இல்லம் வந்திருந்து சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற்றுச் சென்றார் என்ற செய்தியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1933ல் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரி மூடப்பட்டது. அவ்வாண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேருமாறு நாட்டாருக்கு அழைப்பு வந்தது. அக்காலத்து தமிழறிஞர் பலருடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி 1941ல் ஓய்வு பெற்றார்.
மக்கள் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாயிருப்பது (பாஷை அல்லது) மொழி என்பதே. மொழியே மக்களை மாக்களினின்று வேறுபடுத்துவதாகும். இப்பொழுது உலக மக்களால் எண்ணிறந்த மொழிகள் பேசப்படுகின்றன. எம்மொழி எவ்வினத்த வரால் வழிவழியாகப் பேசப்படுகின்றதோ, அம்மொழி அவ்வினத்தவர்க்குத் தாய்மொழி என்று சொல்லப்படும். " காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பது போல், ஒவ்வொருவர்க்கும் அவரவர் தாய்மொழி மதிப்பிற் குரியதே. தாய்மொழியிடத்துப் பற்றில்லாதவரும் மக்கள் எனத்தகுவரோ?
இளமையும் கல்வியும்

நைடதம்
திருவிளையாடற் புராணம்
வெங்கைக்கோவை
திருப்புகலூர் அந்தாதி
முதலிய நூல்களைக் கற்றவர். மேலும், இவர்
கைவல்யம்
ஞானவாசிட்டம்
சாதகாலங்காரம்
குமாரசுவாமியம்
உள்ளமுடையான்
முதலிய நூல்களைக் கற்ற வேதாந்தியாக விளங்கினார்.
வேங்கடசாமியின் பள்ளிப்படிப்பு 4ம் வகுப்புடன் நின்றது.
திருப்புகலூர் அந்தாதி
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி
வெங்கைக்கோவை
நைடதத்தின் முதல் பகுதி
ஆகிய நூல்களைத் தம் தந்தையாரிடம் பாடம் கேட்டார்.
திருவிளையாடற் புராணம்
வில்லிபாரதம்
கம்பராமாயணம் முதலியவற்றைத் தாமே படித்து வந்தார். அப்போது அவருக்கு வயது 16. தம் குடும்ப முன்னேற்றம் கருதி, வேளாண்மையில் நேரிடையாக ஈடுபட்டார். ஒழிந்த நேரங்களில் தமிழ் நூல்களைத் தாமே படித்து வந்தார்.
சூளாமணி நிகண்டு, அமரநிகண்டு ஆகியவற்றிலுள்ள பாடல்களை மனப்பாடம் செய்தார். நன்னூல் முழுவதையும் தாமாகவே கற்று மனனம் செய்தார். தஞ்சையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கக் கூட்டங்களுக்குத் தம் தந்தையாருடன் சென்று, கேள்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.
பண்டிதர் பட்டம்
அந்நாளில் அப்பகுதியில் தொடக்கப்பள்ளி மேற்பார்வையாளராக இருந்த ஐ.சாமிநாத முதலியார் நல்ல தமிழ்ப் பற்றாளர். "சாவித்ரி வெண்பா" எனும் நூலை இயற்றியவர். அவர் வேங்கடசாமியின் தமிழறிவை வியந்து, பாண்டித்துரைத் தேவர் தோற்றுவித்த மதுரைத் தமிழ்ச் சங்கம் பற்றியும், அச்சங்கம் நடத்தி வரும்
பிரவேசபண்டிதம்
பாலபண்டிதம், பண்டிதம்
ஆகிய தமிழ்த் தேர்வுகள் பற்றியும் கூறி, அத்தேர்வுகளை எழுதுமாறு அவரைத் தூண்டினார்.
இளைஞர் வேங்கடசாமி,
1905ல் பிரவேசபண்டிதம்,
1906ல் பாலபண்டிதம்,
1907ல் பண்டிதம்
ஆகிய தேர்வுகளில் சிறப்பாகத் தேறி பல பரிசுகளைப் பெற்றார். பண்டிதம் தேர்வில் முதன்மையாகத் தேறியமைக்காக பாண்டித்துரைத் தேவர் தம் கையினாலேயே வேங்கடசாமிக்குத் தங்கத்தோடா (தங்கக்காப்பு) அணிவித்துப் பெருமைப்படுத்தினார். அனைவரும் அவரை "முத்தேர்வும் மூவாண்டில் முதன்மையினில் முற்றுவித்த பெருமான்" எனப் பாராட்டினர். 1908ல் காஞ்சி பரமாசாரியார் நடுக்காவேரி வந்திருந்தபோது, வேங்கடசாமியை நேரில் வரவழைத்து சிவப்புப் பட்டாடையைப் போர்த்திச் சிறப்பித்தார். நாட்டார் தாம் படிப்பதற்காகப் பயன்படுத்திய இல்லத்தின் மாடி அறை "தமிழவள் இருக்கை" என்ற பெயருடன் இன்றும் இலங்குகிறது.
கல்லூரி, பல்கலைக்கழகப் பணி
ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி கல்லூரியில் 1908 -1909 வரை ஓராண்டும், 1910 முதல் 1933 வரை 23 ஆண்டுகளும் தமிழ்ப் பேராசிரியராய் பணி புரிந்தார். நாட்டார் திருச்சியில் இருந்தபோது, பாரதியார் இவர் இல்லம் வந்திருந்து சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டு தெளிவுபெற்றுச் சென்றார் என்ற செய்தியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1933ல் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரி மூடப்பட்டது. அவ்வாண்டிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேருமாறு நாட்டாருக்கு அழைப்பு வந்தது. அக்காலத்து தமிழறிஞர் பலருடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி 1941ல் ஓய்வு பெற்றார். பின் தமிழ் வேள் உமா மகேஸ்வரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தை புலவர் கல்லூரியில்4 ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணி செய்துசிரப்பித்தார்கள்.
அவருக்கு 8.5.1944ல் மணிவிழாக் கொண்டாட ஏற்பாடாயிற்று. மணிவிழா நடைபெறுவதற்கு 40 நாட்கள் முன்னரே 28.3.1944ல் இறைவனடி சேர்ந்தார். அவரை அவரது சொந்த ஊரில் சமாதி வைத்து, அங்கு கோயில் எழுப்பினர். ஆண்டுதோறும் குருபூஜை நடைபெற்று வருகிறது.
நல்லாசிரியர்
நாட்டார் வகுப்புகளில் பாடம் நடத்தும்போது அமைதி நிலவும். அவருக்கு எல்லாப் பாடங்களும் மனப்பாடம். அவலச்சுவை, பக்திச்சுவை நிறைந்த பாடல்களை இசையோடு படிக்கும்பொழுது அவர் விழிகளில் நீர் ததும்பும். பதம் பிரித்துப் படிக்கும்போதே பொருள் விளங்கும். ஒன்பான் சுவையும் தோன்றுமாறு கற்பிப்பது அவரின் தனிச்சிறப்பு. நாட்டாரது பெருந்தன்மை, பெரும்புலமை, வீண்பேச்சுப் பேசாமை, ஒழுக்கமுடைமை, தெய்வ பக்தி முதலியன மாணவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கின. செய்யுள்களை இசையோடு பாடிக்காட்டுவார்.
வெண்பாவை சங்கராபரணத்திலும்,
அகவலை தோடியிலும்,
துறையைப் பைரவியிலும்,
விருத்தப்பாக்களை காம்போதி, கல்யாணியிலும் பொருந்தப்பாடி மாணவர்களை மகிழ்விப்பார்.
நற்றமிழ் நாவலர்
நாட்டார் அழகு தமிழில் ஆற்றொழுக்காகப் பேசும் திறன் மிக்கவர். அரிய பொருள்களையும் கேட்போர் மனங்கொள்ளுமாறு எளிமையாகச் சொல்லும் இயல்புடையவர். அவர்
மதுரைத் தமிழ்ச் சங்கம்,
திருச்சி சைவ சித்தாந்த சபை,
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம்,
திருநெல்வேலி தமிழ்ச் சங்கம்
போன்ற தமிழ் மற்றும் சைவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். திருச்சியில் 1923 - 25 ஆகிய மூன்றாண்டுகளில் தமிழ்ப் புலவர் மாநாட்டைக் கூட்டினார். 1939 மார்ச் திங்களில், கொழும்பு சென்று விவேகானந்தர் சங்கத்தில் "நால்வர்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். 1940ல் திருப்பதியில் நடைபெற்ற கீழ்த்திசை மாநாட்டில் திருச்சி, கருவூர் சேரர் தலைநகரமாகிய வஞ்சியன்று என வலியுறுத்தி மு.இராகவையங்கார், இரா.இராகவையங்கார் ஆகியோரின் கூற்றை மறுத்துரைத்தார்.
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940ல் நாட்டாருக்கு "நாவலர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
ஆராய்ச்சி நூல்கள்
"வேளிர் வரலாறு" என்ற நூலில் வேளிர் என்பார் வடநாட்டினின்று வந்தவரல்லர், அவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடியினர் என நிறுவியுள்ளார்.
1919ல் எழுதப்பட்ட "நக்கீரர்" என்ற நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது.
"கபிலர்" என்ற நூலில், மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த திருவாதவூரே கபிலர் பிறந்த ஊர் என நிறுவியுள்ளார்.
1923ல் எழுதப்பட்ட "கள்ளர் சரித்திரம்" என்ற நூல் கள்ளர் இனத்தின் வரலாறு எனினும், பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கத்தக்க தகுதியை உடையது எனத் தமிழ்த் தாத்தா உ.வே.சா. பாராட்டியுள்ளார். மேலும் "கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்', "சோழர் சரித்திரம்', "கட்டுரைத் திரட்டு' ஆகியவையும் இவர் எழுதிய நூல்கள்.
உரையாசிரியர்
நாட்டார் தலைசிறந்த உரையாசிரியர்.
இன்னா நாற்பது,
கார் நாற்பது,
களவழி நாற்பது,
ஆத்திசூடி,
கொன்றைவேந்தன்,
மூதுரை,
நல்வழி,
நன்னெறி
ஆகிய நூல்களுக்கு உரை வகுத்துள்ளார். 1931ல் "பெருஞ்சொல் விளக்கனார்" அ.மு.சரவண முதலியார் துணையுடன் திருவிளையாடற் புராண உரை வெளியிடப்பெற்றது. சிலப்பதிகார உரை, சிலப்பதிகாரம் முழுமைக்கும் அமைந்த உரையாகும்.
கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையுடன் இணைந்து நாட்டார் அகநானூற்றுக்கு உரை எழுதியுள்ளார். நாவலர் நாட்டார், திருச்சி, தஞ்சைப் பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட வேண்டுமென 1925ல் கனவு கண்டார். அக்கனவு தற்போது நனவாகியுள்ளது. தற்போது தஞ்சை அருகிலுள்ள வெண்ணாற்றங்கரையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி என்னும் பெயரில் தமிழ்க் கல்லூரி இயங்கி வருகிறது.
சான்றோரின் தூய எண்ணங்கள் செயல்வடிவம் பெறத்தக்கன என்பதற்கு இவற்றினும் வேறு சான்றும் வேண்டுமா?
1940 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமில் மா நாட்டில்நாவலர் என்னும் சிரப்புபட்டம் செப்பேட்டில் பொறித்து வழங்கப்பெற்றது. ஐயா அவர்கள்எழுதிய உரைகள், தமிழ் ஆராச்சி நூல்கள் பல. 1921 -22 இல் திருவருட் கல்லூரி ஒன்ற்றுநிறுவ முயற்சி செய்து நிறைவேறாமல் போக , 1925 - 26 இல் தஞ்சை அல்லது திருச்சியில்தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டுமென்று விரும்பி அப்போதைய அமைச்சர்டி.என். சிவஞானம்பிள்ளை அவர்கள் தலைமையில் அமைத்த செயற்குழுவில் உறுப்பினராகஇருந்து செயலாற்றிச் சிற்ப்பித்தார்கள்.
அவருக்கு 8.5.1944ல் மணிவிழாக் கொண்டாட ஏற்பாடாயிற்று. எளிய வாழ்வும் இனிய நோக்கமும்கொண்டவர், நெஞ்சிலுரமும் நேர்மைத் திறமும் மிக்கவர். சிறந்த புலமையாளர், உயர்ந்தபண்பாளர். தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தொண்டாற்றிய நாட்டர் 28-3.1944 அனறு தம் மணி விழா நடை பெறுவதற்கு முன் காலமானார். அன்னாரின் உடல்பிறந்த மண்னணில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் கற்கோயில் எழுப்பி ஆகம விதிகளின்படி பூசை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இக்காலத்தில் தமிழ் புலவர் ஒருவருக்காகஎழுப்பப்பட்ட முதல் கற்கோயில் இதுவே.
நாட்டாராய்யாவின் அகன்ற அறிவு.
ஆழ்ந்தபுலமை.
தெளிந்த ஆய்வு.
தேர்ந்த எழுத்துத்திறன்.
பேச்சாற்றல்.
படைப்பாற்றல்.
உரைவளம்.
மனவளம்.
மனிதநேயம்.
போன்ற சிறப்புகளையெல்லாம் எதிர்கால இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும். எழுத்துநடை, பேச்சுநடை இரண்டிற்கும் தூய நடை எடுத்துவைத்தார். உயர்வான தமிழ் வளர்த்தார். உலகில் நல்ல பேர்வளர்த்தார். தமிழுக்குப் பெருமைதனைத்தான் வளர்த்தார்.
உலகுள்ளவரை தமிழ் வாழும்.
தமிழுள்ளவரை நாட்டார்தம் புகழ் வளரும்.

சோழவள நாட்டில் தஞ்சைக்கு வடமேற்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூர் நடுக்காவேரி. இவ்வூர் காவேரியின் கிளை நதியாகிய குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கண்டியூருக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் 2ம் நாள் (12.4.1884) கள்ளர் குலத்தில் முத்துசாமி நாட்டார் - தைலம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக வேங்கடசாமி பிறந்தார். இவர் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான். தமிழ் நூற்கடலை நிலை கண்டு உணர்ந்தவர். அன்பும், அடக்கமும், அமைதியும் அணிகலனாய்ப் பூண்ட இப்பெருமகனே பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆவார்.

Comments
Post a Comment