மருதுபாண்டியர் குடும்பத்து நகைகள்

ருதுபாண்டியர் குடும்பத்து நகைகள் 24, அக்டோபர் 1801இல் ஆங்கிலேயரால் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவரின் மனைவி வீராயி, மருதுபாண்டியரின் மகன் சிவஞானத்தின் மனைவி மீனாம்பாள் இவர்களது 6600 நட்சத்திர பகோடாப் பெறுமானமுள்ள நகைகள் சிவகங்கை ஜமீந்தாரால் பறித்துக்கொள்ளப்பட்டன.
அவ்விரு பெண்களும் 1803ல் நகைகளைக்கோரி நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தனர். நகைகளை அவர்களிடம் வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது. கீழ்க் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ஜமீந்தார் திருச்சியிலுள்ள சதர்ன் பிரொவின்சியல் கோர்ட் ஆஃப் அப்பீல் (Southern Provincial Court of Appeal) இல் மேல் முறையீடு செய்தார். 3 மார்ச், 1806இல் அப்பீல் கோர்ட் ஸ்மிருதி சந்திரிகா எனும் இந்து நூலை ஆதாரமாகக் கொண்டு, மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமைக்கு அடிமைகள் ஆகவே அவர்களின் மனைவியரும் அடிமைகள். அடிமைகளுக்குச் சொத்து உரிமை கிடையாது. எனவே ஜமீந்தார் கைப்பற்றிய நகைகளைக் கோரிட உரிமை கிடையாது என ஜமீந்தாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு உரைத்தது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்