அரிசி-பருப்பு அடை


அரிசி-பருப்பு அடை:--வீட்டில் மிகவும் சுவையான அடை செய்யும் முறை:-----------------------------------------------------------தேவையான பொருட்கள்:::இட்லி அரிசி-_3கப்,துவரம் பருப்பு -1 கப்,வரமிளகாய்-10,.பூண்டு -10 பற்கள்,சோம்பு- அரை டீஸ்பூன்,ம்ஞ்சள் தூள்-சிறிதளவு, பெருங்காயம்-சிறிதளவு,உப்பு-தேவையான அளவு.பெரிய வெங்காயம்-3,கருவேப்பிலை,கொத்தமல்லி,தேங்காய் துறுவல் சிறிதளவு.-----------------------------------------------------------------------முதலில் அரிசியையும் துவரம்பருப்பையும் சுத்தம் செய்து கல் நீக்கி மிக்சியில் [Dry]ட்ரையாக  அரைக்கவும். அது பொடியாக ஆனவுடன் அதில் மிளகாய்,சோம்பு,பூண்டு,சேர்த்து அரைக்கவும்.பின்பு தண்ணீர் சேர்த்து அரைத்து  பின்பு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.அதில் மஞ்சள் தூள்,உப்பு,பெருங்காயத்தூள் சேர்க்கவும்.அதில் சிறிதாக நறுக்கிய  பெரிய வெங்காயம், கருவேப்பிலை,கொத்தமல்லி,தேங்காய் துறுவல் சேர்த்து கலக்கவும். தோசை வார்க்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.பின்பு தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி,தோசை போல் மிதமான சூட்டில் வார்த்து எடுக்க வேண்டும்.வேண்டும் என்ற அளவு ஆயில் சேர்த்து சுட வேண்டும்.இதை அவியலுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.காரக்குழம்புடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.-------------------------------------------சமையல் குறிப்பு----- By அகிலா குழந்தைவேலு

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்