காவிரி நடுவர் மன்றம்


ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற நீர்த்தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கென இந்தியப்பாராளு மன்றத்தில் 1956 ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.-----காவிரி நதி நீர் தகராறு நடுவர் மன்றம் 1990 ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.நடுவர் மன்றம் தன் இறுதித்தீர்ப்பை 2007 பிப்ரவரி மாதம் வெளியிட்டது
தமிழ் நாடு கேட்டிருந்த 566 டி எம் சி தண்ணீருக்குப்பதிலாக 419 டி எம் சி தண்னீர் விடச்சொல்லி தீர்ப்பு.அதையே ஒழுங்காக கர் நாடக அரசு தரவில்லை.-----
1997 ல் இந்திய அரசு காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது.கர்நாடக அரசு அதை எதிர்க்கவே காவிரி ஆணையத்துடன் காவிரிக் கண்காணிப்புக் குழு வையும் அமைத்தது.புள்ளி விவரங்கள் சேகரித்து ஆணையத்துக்கு வழங்கி ஆணையம் இடும் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குழுவின்
வேலையாகும்.------------------------------------------இரண்டாம் இராஜராஜ சோழன்  கி.பி. 1146-1163--
"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள் காண வாரீர்"
         -இராச ராசா சோழனுலா
காவிரிப் பிரச்சனை ஆரம்பமாகிய காலம் இவனது காலமாக தான் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் நாம் காவிரிப் பிரச்சனை ப் பற்றித் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். மேற்கு மழைத் தொடரில் ஆரம்பிக்கும் காவிரி நதிதனை (அடிக் காவிரி) சோழ நாடு செழிக்க விடாமல் இருக்கும் பொருட்டு அடைத்து விடுகின்றனர். இதனை அடுத்து சோழன் படை எடுத்து சென்று பகைமை வென்று காவிரி தனை சோழ நாட்டின் கண் திருப்பியவன் என்று பாடப் படுகின்றான்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்