கரிகால் சோழன்

கரிகால் சோழனின் இயற்பெயர்:--வளவன் .காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியும், காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தியும் தமிழ் நாட்டின் நெற்குவியலுக்கு வித்திட்டவன்.இலங்கையை வென்று 12000 கைதிகளை கொண்டு வந்து அந்த பணிகளுக்கு பயன்படுத்தினான். மற்ற மன்னர்களையும் இப்பணிகளுக்கு பயன் படுத்திக்கொண்டான்.காவிரியின் கரைகளை நுணுக்கமாக புரிந்து கொண்டு சரியான இடத்தை தேர்வு செய்து அணையை கட்டியதால்" புனல் நாடன் "என அழைக்கப்பட்டான்.கல்லணை ,இக்கால அணை வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கல்லணை வரை செல்லும் பாதை அன்றிலிருந்து இன்று வரை "கரிகால் சோழ நெடுஞ்சாலை "என்றே அழைக்கப்படுகிறது.கரிகாலன் 12 வயதில் பட்டம் ஏற்று தாய் மாமன் இரும்பிடர் தலையார் உதவியுடன் அரசன் ஆனான்.களம் பல கண்டு வெற்றி வாகை சூடினான். 53 வயதில் கல்லணையை கட்டினான்.பின் எஞ்சிய நாட்களை தஞ்சாவூரில் கழித்து விட்டு தனது 83 வது வயதில் உயிர் நீத்தான்.கரிகாலன் என்ற பெயரில் நான்கு சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களில் ராஜ ராஜ சோழனின் மூதாதையனும் கரிகால் பெருவளத்தான்,கரிகால் வளவன் என்று போற்றப்பட்டவனும் ஆகிய முதலாம் கரிகாலனே கல்லணையைக்கட்டியவன். அவனுடைய ஆட்சிக் காலம் கி மு 65 முதல் கி பி 18 வரை. சங்க கால சோழ மன்னர்களில் மிகவும் பெருமை வாய்ந்தவன். பரணர், பெருங்குன்றூர் கிழார் ஆகிய புலவர்களால் பாடப்பெற்றவன். தந்தை:--இளஞ்சேட் சென்னி. தாய்:-- வேள் மகள்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்