தக்காளி பிரியாணி, ராய்தா செய்முறை

தக்காளியின் சுவையை விரும்பி உண்பவர்களா நீங்கள்? தக்காளியில் வித விதமான உணவு வகைகளை செய்து சாப்பிடலாம். அதிலும் பழுத்த தக்காளியில் பிரியாணி செய்து சாப்பிட்டால் செம்ம டேஸ்டா இருக்கும்ங்க. சொல்லும் போதே நாக்கு ஊருது சரியா...... சில குழந்தைகளுக்கு தக்காளி சாதம் செய்து கொடுப்பதை விட, தக்காளியை பிரியாணி போல செய்து கொடுத்தால் விரும்பி உண்பர். வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தக்காளி பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 250 கிராம்
சீரகம் - அரை டிஸ்பூன்
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 1
மிளகாய்த் தூள் - அரை டிஸ்பூன்
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் - கால் டிஸ்பூன்
தேங்காய் - 3 டிஸ்பூன் (அரைத்தது)
எண்ணெய் - 3 டிஸ்பூன்
நெய் - 2 டிஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி, காய்ததும் சீரகம் சேர்த்து பொண்ணிரமாக வதக்கவும், நறுக்கி வைத்த தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவை சேர்த்து தொக்காக வரும் வரை வதக்கி, கொத்தமல்லி பொடிய்க நறுக்கி சேர்க்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியை சேர்த்து மூடி, ஒரு விசில் விட்டு, 5 நிமிடம் சிறிய தீயில் வைத்து இறக்கவும். சூடான சுவையான தக்காளி பிரியாணி ரெடி.
ராய்தா செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி உப்பு போட்டு பிசைந்து , தனியாக வைக்கவும், தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கவும். தேங்காய், இஞ்சி இரண்டையும் சேர்த்து அரைக்கவும். நறுக்கியவற்றை, அரைத்தவற்றை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தயிருடன் கலந்தால் சுவையான ராய்தா ரெடி.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்