பேரீச்சம் பழத்தின் நன்மைகள்


பேரீச்சம் பழத்தின் நன்மைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இரும்புசத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்த பழம் நரம்பு தளர்ச்சியை போக்கும். புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ள பேரிட்சம் பழங்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

கண்பார்வை தெளிவடைய

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது. பார்வை குறைபாடை போக்கி பார்க்கும் திறனை அதிகரிக்கும். கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை உள்ளது. இனிப்பு சுவையுள்ளதால் இந்த பழத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை அளிக்கும் பேரிட்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். தூசு இல்லாத சுத்தமான பேரீச்சம் பழத்தைதான் வாங்கி சாப்பிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்