மாடக்கோவில்கள்

மாடக்கோவில்கள்
தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொடிக்கோவில், மாடக்கோவில் என மூன்று வகையாக கூறலாம்.இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு விதியாசமாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும்.ஆனால் மாடக்கோவில்களின் நுழைவு வாயில்கள் குறுகலாக இருக்கும். யானைகள் நுழைந்து விடக்கூடாது என்பது இதன் காரணம்.
புவியாண்ட மாமன்னன் கோச்செங்கசோழன் தான் மாடக்கோவில்களை கட்டிய முதல் மன்னன். இவன் யானைகள் நுழையாதபடி 70 சிவாலயங்களையும் மற்றும் 3 திருமால் கோவில்களையும் கட்டிய பெருமை பெற்றவன்.மேலும் அதிக சிவன் கோவில்களை கட்டிய மன்னன் என்ற பெருமை பெற்ற இம் மன்னனின் பிறப்பு மிகவும் வியக்கத்தக்கது.
இவனது தாய் சோழ அரசி கமலாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது அரச ஜோதிடர்கள் இந்ந பிறக்கும் குழந்தை இன்னும் சிறிது தாமதமாக பிறந்தால் உலகம் போற்றும் மாபெறும் மன்னனாக இருப்பான் என்றனர். இதனை அறிந்த அரசி அந்த நல்ல நேரம் வரும்வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்க விட ஆனையிட்டாள். நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து விடப்பட்ட அரசிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டதனால்
பிறந்த குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன ஆனால் அரசி இறந்துவிட்டார்.சிவந்திருந்த கண்கள் பெற்ற குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் சூடினர்.
காவிரிக் கரையில் திருவானைக்காவல் என்னும் சிவதளத்தில் கோச்செங்கண் கட்டிய முதல் மாடக்கோவில் இன்றும் நம்மை வியக்கவைக்கிறது.
சிவாலயங்களில் மாமன்னன் கோச்செங்கசோழனுக்கு மாசி மாத சதய நட்சத்திரத்தில் விழாக்களும் சிற்ப்பு பூஜைகளும் ஆரதனைகளும் நடத்தப்படுகிறது.மாடக்கோவில்கள் என்ற கலைச்சிற்பங்களை எமக்களித்த வான் புகழ் கோச்செங்கசோழன் என்ற கள்ளர் குல மா மன்னனை நாம் நினைவு கொண்டு நாம் பெருமை அடைவோம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்