சோழ மன்னர்களின் மணவுரவுகள்.

சோழ மன்னர்களின் மணவுரவுகள்.
1. உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி கி.பி 2ம் நூற்றாண்டில் அரசுபுரிந்தவன்.கரிகால் சோழனின் தந்தையுமாவான். இவன் மனைவி கள்ளரின அழுந்தூர் வேளிர் குல இளவரசியாவாள்.
2. கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள்.
3. கரிகால் சோழனின் மகள் நற்சேனையை மணந்தவன் சேரன் இமயவரம்பன். இவர்களின் மகன்கள் மா மன்னன் சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகார இளங்கோ அடிகளும் ஆவர். வீரமும் புலமையும் ஒரே வயிற்றில் தோன்றிய நல் முத்துக்கள்
.
4. விசயாலய சோழன் (கி.பி. 846 - 881) ஆவூருக்கு அருகில் உள்ள ஊத்துக்காடு என்னும் ஊரில் கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (கள்ளரின மன்னன் இராசராச சோழன். புலமை வேங்கடாசலம் பக்கம் 6)
5. விசயாலய சோழனின் மகன் முதல் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் இளங்கோப்பிச்சி என்பவளையும், மற்றும் காடுபட்டிகள் வழி வந்த காடுவெட்டியார் மகள் திரிபுவன மாதேவியையும் மணந்திருந்தான் (E.P.Ind.Vol.XXVI, பக்கம் 233, 234)
6. முதல் ஆதித்த சோழன் மகன் கன்னரதேவன் (கி.பி கள்ளரினத்தின் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பூதிமாதேவ அடிகள் என்பவளை மணந்திருந்தான் (S.I. Vol.VIII.Np 665)
7. முதல் பராந்தக சோழன் (கி.பி. 907 - 953) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் மனைவியை பெற்றிருந்தான். (அன்பில் செப்பேடு E.P. Ind. Vol XV. No 5)
8. கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) கள்ளரினத்தின் மழவராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் செம்பியன் மாதேவி என்பவரை மணந்திருந்தான் (S.I.I. Vol. VIII. No.141)
கல்வெட்டு திருக்கோடிக்கா திருக்கோடிக்காவுடையார் கோயில். கும்பகோணம். கி.பி 982 உத்தமசோழ்ன் 11ம் ஆட்சி ஆண்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரி பன்ம(ர்க்)கு யாண்டுயக
ஆவது வடகரை நல்லாற்றூர் நாட்டு திருக்கோடிக்காவில்
மஹாதேவர்க்கு ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு
வாய்த்த மழவரையர் மகளார்
பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார்
9. அரிஞ்சய சோழன் (கி.பி. 956 - 957) கள்ளரினத்தின் வைதும்பராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கல்யாணி என்பவளையும் கொடும்புரார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பூதி ஆதித்த பிடாரி என்பவளையும் மணந்திருந்தான் (The Cholas இரண்டாம் பதிப்பு பக்கம் 152)
10. இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் (கி.பி.957 -970) கள்ளரினத்தின் சேதுராயர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான் (S.I.I. Vol.VII.No 863 மற்றும் பெரியபுராண ஆராய்ச்சி டாக்டர்.மா. இராசமாணிக்கனார் பக்கம் 74.)
11. உத்தம சோழன் (கி.பி. 957 - 970) கள்ளரினத்தின் மழபாடியார் (மழ வாடியார்) என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த மழபாடித் தென்னவன் மாதேவி என்பவளையும் கள்ளரினத்தின் இருங்களார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளையும், கள்ளரினத்தின் விழுப்பரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த கிழானடிகள் என்பவளையும் மணந்திருந்தான் (Ins. 494 of1925, Ins 298 of 1906)
12. மாமன்னன் முதலாம் இராசராச சோழன் (985 - 1014) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன் மாதேவி என்பவளையும் மற்றும் கொடும்பாளூர் வேளிர்குல இளவரசி வானதி என்னும் வானமாதேவியையும் மணந்திருந்தான் (பிற்காலச் சோழர் சரித்திரம் பகுதி 1 பக்கம் 141)
13. இராசேந்திரசோழன் (கி.பி. 1012-1044) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன்மாதேவி என்பவளை மணந்திருந்தான்
14. முதல் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) கள்ளரினத்தின் காடவராயர்
என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த காடவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான்
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 232 -233)
14. இரண்டாம் இராசராச சோழன் (கி.பி. 1146 - 1163) கள்ளரினத்தின் சேதிராயர்
என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த அவனி முழுதுடையாள் (உலகுடை முக்கோக் கிழானடிகள்) என்பவளை மணந்திருந்தான்
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 292)
15. மூன்றாம் இராசராச சோழன் (கி.பி. 1216 - 1256) கள்ளரினத்தின் வல்லவரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த புவனமுழுதுடையாள் என்பவளை மணந்திருந்தான்.
(பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவ பண்டாரத்தார் பக்கம் 357)
16. மாமன்னன் முதல் இராசராச சோழனின் தமக்கை முதலாம் குந்தவை வல்லவரையன் வந்தியதேவனை மணந்தாள்.

Comments

  1. 13. இராசேந்திரசோழன் (கி.பி. 1012-1044) கள்ளரினத்தின் பழுவேட்டரையர் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த பஞ்சவன்மாதேவி என்பவளை மணந்திருந்தான்

    Intha data sariyanu oruthadava verify panunga boss..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்