சிபிச் சக்கரவர்த்தி

சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.
'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.
புறநானூறு
புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.
சிலப்பதிகாரம்
தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.
பெருந்தொகை
பெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று 'புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான்' என்று குறிப்பிடுகிறது.
கொடைமடம்
பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி பெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம்.
பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்
வரையா ஈகை போல யாவிரும்
கொடைப்படு வீரக் கொடை வலம்படுதலின்
முன்னர் ஒருமுறைத் தன் உழை இரந்த
அன்பு இல் அரக்கர் வேண்டு அளவும் பருக
என்பு தொறும் கழிப்பித் தன் மெய் திறந்து வாக்கிக்
குருதிக் கொழும்பதம் கொடுத்ததும் அன்றிக்
கடுந்துயர்ப் பட்ட கள்ளப் புறவின்
மாய யாக்கை சொல்லிய தான் தன்
உடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. பெருந்தொகை தொகுப்புப் பாடல் எண் 101

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்