கேரளாந்தகன்


கேரளாந்தகன்:
தென்னிந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் விரும்பித் தேடி வரும் இடங்களில் ஒன்றாக தஞ்சைப் பெருவுடையார் கோயில் உள்ளது. வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் ராஜராஜன் , கேரள அரசன் ரவிவர்மனை போரில் வென்றதை மனதில் கொண்டு, பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு, "கேரளாந்தன் வாயில்' என்றே பெயரிட்டார் .
"அந்தகன்' என்ற சொல்லுக்கு, "பார்வையற்றவன்' என்பது பொருள். உயிர்களைப் பறிப்பதில் பாரபட்சம் காட்டாததால் யமதர்மனுக்கும் "அந்தகன்' என்ற பெயர் உண்டு. பார்வையற்றோர் எங்கும் இருளையே காண முடிவது, இயற்கை செய்த சதி! அப்படி இருள் மயமாயிருந்த "அந்தகாசுரன்' என்பவனையும், அந்தகனாகிய யமனையும் சம்ஹாரம் செய்தவர் சிவபெருமான் என்று புராணங்கள் கூறும். அதனால் முறையே "அந்தகாசுர மூர்த்தி' என்றும், "கால சம்ஹார மூர்த்தி' என்றும் பரமசிவத்துக்கு திருநாமங்கள் உள்ளன.
சிறந்த சிவபக்தராகிய ராஜராஜ சோழனும் தனது இஷ்ட தெய்வத்தின் திருப்பெயர்களின் சாயலிலே, "கேரளாந்தகன்' எனப் போற்றப்படுவதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். "சிவபாத சேகரன்' என்பதும் இவருடைய பக்தியையும், அடக்கவுணர்வையும் பறை சாற்றும் புகழ்ப் பெயர்களில் ஒன்று! ஆயினும் தனது வீரத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், பெருவுடையார் கோயிலின் முகப்புக் கோபுரத்துக்கு "கேரளாந்தகன் வாயில்' என்று பெயரிட்டார்.


Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்