கரிகாலன் ஆற்றிய பெரும்போர்

கரிகாலன் ஆற்றிய பெரும்போர் வாகைப் பறந்தலைப் போராகும். கரி, பரி, தேர், காலாட்படைகளை மிகுதியாக பெற்றிருந்த சேரன், பாண்டியன் மற்றும் பதினொருவேளீர்களையும் ஒன்று சேர வாகைப்பறந்தலை, வெண்ணியில் வெற்றிகண்டவன் மாமன்னன் அடங்காபிரியன் பெருவளத்தான் கரிகாலன். பகைவர்கள் தம் கொற்றக் குடைகளையும், புகழ்க் கொடிகளையும் களத்தில் எறிந்துவிட்டு ஓடினர் என்று பரணர் விரித்துரைத்துள்ளார். போர்களத்தை சூடாவாகை என்றும் பரணர் உரைத்துள்ளார். இதன் மூலம் வாகையை போர்க்களம் என்றும் வெற்றிக்குரிய பூவாக நாம் நினைக்க இடமில்லை என்றும் அறிய முடிகிறது

அவைகூடி வந்தமர்ந்தான் மாமன்னன் அடங்காபிரியன் பெருவளத்தான் கரிகாலன்
உளமார வாழ்த்தினான் உய்யங்கொண்டான்
பகைவனின் வருகை சொல்ல புயல் போல் வந்தான் புரங்காட்டான்.
பகையான் படையுடன் வரும் செய்தி பகிர்ந்தான் பணிபூண்டான்
எடுத்துரைத்தான் பேரறிவு ஒளிகொன்டான்
கொதித்தெழுந்தான் அரசுக்குடையான்.
அண்டமும் நடுங்க ஆவேசம் கொண்டான் அடங்காபிரியன்
சிலிர்த்தெழுந்தான் சிலுப்பியன்.
போர் ஒன்றே முடிவு என்றான் போர்பொருக்கியான்
களம் கான துடித்தான் காங்கேயன்
இராசதந்திரம் பகின்றான் இராசகண்டியன்
இசைவுடன் கண் அசைத்தான் இராசப்பிரியன்
ஒற்றையர் படை தந்தான் ஒற்றையன்
எதிரியின் பலம் படித்தான் எண்ணாட்டுப்பிரியன்
தலை அசைத்து ஆமோதித்தான் ஆளியான்
போர் விளைவினை விவாதித்தான் போர்முட்டியான்
கலங்காமல் போர் இலக்கனம் தொகுத்தான் கரைமீண்டான்
காவலில் தன் பங்கை எடுத்துரைத்தான் காவல்குடியான்
மதிணுற்பம் பகின்றான் மழநாட்டு மழவராயன்
அணிகலன் திரட்டினான் ஐந்னூற்றுப்பிரியன்
சேனை திரட்டினான் சேதி நாட்டான் சேதிராயன்
நம் படை பலம் பகன்றான் வில்லேந்தி வில்லவராயன்
வியூகமமைதான் விஞ்சிராயன்.
துனை நின்றான் மதினுட்ப இராசாளியன்
தனிப் படை அமைத்தான் தனிராயன்
வெண்ணியில் களம் காண்போம் என்றுரைத்தான் வெண்ணுமலையான்
வெண்ணியில் வாகைப்பறந்தலை தேர்ந்தெடுத்தான் வாண்டையான்
களவழி அமைத்தான் காடுவெட்டி களனி கண்ட காடுவெட்டியான்
நெடுங்களம் அமைத்தான் நெடுவாண்டான்
அமுது பொங்க வழி வகுத்தான் உழுக்கொண்டான்
நீர் நிலைகள் காண விரைந்தான் விசலாண்டான்
மருந்தகம் அமைந்திட நிலம் தேடினான் நிலங்கொண்டான்
வைதியர் பட்டியல் பரைசாற்றினான் வைதும்பராயன்
வடக்கே வாற்படை அமைத்தான் வங்கத்தரையன்
தென் திசையில் அணி படைத்தான் தெங்கொண்டான்
மேற்கு மேட்டில் காத்து நின்றான் மேற்கொண்டான்
கிழக்கில் கிளர்தெழுந்தான் கிளாமுடையான்
குதிரைப்படையுடன் குடிகொண்டான்
காலால்படையுடன் கார்கொண்டான்
விற்படையுடன் வில்லத்தேவன்
வாட்படையுடன் வாள்கொண்டான்
ஈட்டியுடன் ஈழத்தரையன்
யானைகளுடன் சாமுத்திரியன்
புரவி மேல் புன்னகை பூத்தான் புலிக்கொண்டான்
தலைமை ஏற்றான் அச்சமறியான்
ஆத்திமாலை புனைந்து ஆர்பரித்தான் ஆர்சுத்தியான்
வீரத்திலகமிட்டான் வீரமுண்டான்
சங்கொலி எழுப்பினான் சங்கப்பிரியன்
படைகள் களமிறங்க வாள் வீசினான் வாணாதிராயன்
ஆயிரக்கணக்கான மறவர்கள் பங்கேற்க களம் கண்டான்ஆயுதபிரியன்
மோதல் வெடித்தது எங்கும் கள்ளர்குல மறவர்களின் ஆரவாரம்
முதல்நாள் சேரன் தன் பலம் இழந்தான் முழக்கமிட்டான் சேனாதிபதியான்
இரண்டாம் நாள் பாண்டியன் தன் முடி இழந்தான் கர்ஜித்தான் தஞ்சிராயன்
மூன்றாம் நாள் பதினொருவேளீர்களும் படை இழந்தனர் வாகை சூடினான் சூரக்கோட்டையான்
எதிரிகள் படை இழந்து ஓட எழுச்சியுடன் நின்றான் ஏனாதிகொண்டான்
புலிக்கொடி அசைத்து கொண்டாடினான் கொடிகொண்டான்.
போர் முடிந்து வெற்றி முரசு கொட்டினான் முடிகொண்டான்
மன்னனுடன் கலங்கிய கண்களுடன் களம் வந்தான் கலிங்கராயன்
மடிந்தோர் முன் மண்டியிட்டான் மாமன்னன்
செங்குருதி நீக்கி நீராட்டினான் செயங்கொண்டான்
மலர் தூவி மரியாதை செய்தான் மன்றாயன்
ஆத்திமாலை அணிவித்தான் மாலையிட்டான்
சிதையிட்டான் சிவலிங்கதேவன்
நீர் தெளித்தான் மன்னவன் அரசுடையான்
கூடி நின்றோரை கைகூப்பி நின்றான் கூராயன்
கல் நட்டான் கங்கைநாட்டான்
கண்ணீர் விட்டான் கலங்கா கருப்பூண்டான்
அனைத்துக்கும் ஆணையிட்டு அடங்கி நின்றான் அண்டங்கொண்டான்
பகைவரின் உயிரில்லா உடல் அனைத்திற்கும் சிதையூட்ட ஆனையிட்டான் பெருவளத்தான்.
செவ்வனே செய்து முடித்தான் செம்மைகொண்டான்
பரிவாரங்களுடன் களம் அகன்றான் தலைநகர் நோக்கி அரசுக்குடையான்.
வெற்றியின் விலை சொன்னான் வெற்றியன்
தலை அசைத்து ஆம் என்றான் தானாதிபதியான்
அரன்மனை காத்து நின்றான் காவாளியான்
வெற்றிச்செய்தி செப்பினான் வெள்ளங்கொண்டான்
மனமகிழ்ந்தான் மந்திரியான்
மங்களம் பாடினான் மதில்சுற்றியான்
முரசு கொட்டி முழக்கமிட்டான் முனையதரையன்
நாடே வீர மறவர்களை வரவேற்க காத்திருக்க தலைமை ஏற்றான் நாட்டரசன்.
தலைநகரில் கால் பதித்தான் மாமன்னன் கரிகாலன்.
மரித்த மறவர்களின் மனை நோக்கி நடந்தான் பெருவளத்தான்
உயிர் நீத்த மறவர் வாரிசுகளுக்கு ஆறுதல் பகிர்ந்து கொடை அளித்தான்அரசுக்குடையான்
புண்பட்ட மறவர்களுக்கு ஆவண செய்ய பணிக்கப்பட்டான் புண்ணைகொண்டான்
அரன்மனை நோக்கி நகர்ந்தது மன்னனின் தேர் சாரதியானான் அங்கராயன்
நாடே விழாக்கோழம் கண்டது தலைமை ஏற்றான் சோழப்பிரியன்
அரன்மனை வாயிலில் வரவேற்றான் வணங்காமுடிபண்டாரத்தான்
வென்ஆத்தி மலர் தூவி வரவேற்றான் வெற்றிகொண்டான்
வாழ்த்துரை வழங்கினான் வாயாளியான்
பாமாலை பாடினான் பத்துடையான்
வெண்சாமரை வீசினான் விளப்பன்
இசைமழை பொழிந்தான் இராங்கியன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்