சிபிசோழன்

தோன்றின் புகழோடு தோன்றுக , என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாகியது தான் #சோழ வம்சம். உலகில் ஆயிரமாயிரம் அரசர்களின் வரலாறு இருந்தாலும் அவையனைத்தும் சோழர்களின் வரலாற்றிற்கும் , அவர்களின் நீதி , நேர்மை , கலை , வீரம் , ஆன்மிகம் , வளம் ஆகியவற்றிற்கு ஈடு இணையாகாது .

       சோழர்களின் அடிப்படை மரபை ஆராய்ந்தால் அவர்கள் சூர்ய மரபை சேர்ந்தவர்கள். "ஒரு வம்சத்தினர் தனது தந்தை வழி மரபையே பின்பற்றுவர் . ஒருவருக்கு ஒரு தந்தை என்பது போல ஒரு மரபும் ஒரு மனிதனிலிருந்து வந்ததே" . எனவே சோழர்களை தங்களின் முன்னோர்களாய் கருதுபவர்கள் அனைவரும் #சூரிய_மரபை சேர்ந்தவராய் இருத்தல் வேண்டும்.

      காசியப முனிவருக்கும் -அதிதிக்கும் மகனாய் பிறந்தவர் தான் #விவஸ்வான் என்ற சூரியதேவன் . விவஸ்வானை விஷ்ணுவின் அவதாரமாக கருதியதால் சூரிய நாராயணன் என்றும் அழைத்தனர் . சூரியனின் விஸ்கர்மாவின் மகள் சந்தியாவை மணந்தார். இவர்கள் மகன் தான் #வைவஸ்த மனு எனப் பெயரிடப்பட்ட சத்திய விரதன் ஆவான். சத்திய விரதன் தென் தமிழகத்தை ஆண்ட முதல் அரசனாவன். பெரும் பிரளய காலத்தில் உயிர்களையும் வேதங்களையும் காப்பாற்றி கரை சேர்த்தவர் அவரே . "#பிரளய காலத்தை பொய் என்று எவரும் சொல்ல முடியாது. ஐரோப்பிய , அரேபிய இதிஹாசங்களில் பெரும்பிரளயமும் அதில் மக்களை காப்பாற்றிய நோவாவைப் பற்றிய கதைகள்" உண்டு. அறிவியல் படியும் பெரும்பிரளய காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது . குமரிக்கண்டம் பெரும் பிரளயம் ஏற்பட்டு அழிந்ததைப் பற்றி தமிழ் இலக்கியமும் கூறுகின்றன.

   வைவஸ்தமனுவின் பெயரால் தான் மனிதன் என்று அழைக்கப்படுகிறார்கள் . மனுஸ்மிருதி/மனு நீதியை எழுதியவரும் இவர் தான் . வைவஸ்த மனுவின் மகன் தான் . புகழ்பெற்ற இஷ்வாகு அரசன் .அயோத்தியை ஆண்ட இஷ்வாகுவின் வம்சத்தில் தான் ஹரிச்சந்திரன் , பகிரதன் , ரகு , தசரதன் , ராமன் உள்ளிட்ட அரசர்கள் தோன்றினர் . இவர்களுக்கு பின் சூர்யமரபில் கிருஷ்ணருக்கு உதவிய முசுகுந்தனும் , புறாவிற்காக தன் சதையை அளித்த சிபிச்சக்கரவர்த்தியும் தோன்றினர். சோழர்களின் முன்னோர் தான் #சிபிசோழன்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்