காவிரி கொணர்தல்

காவிரி கொணர்தல் :

  அரசன்  சோழனுக்கு பிறகு அரியணை ஏறிய மன்னர்களில் முக்கியத்துவம் பெற்றவர் #காந்தன் . காந்தன் தனது முன்னோரான சூரிய மரபை சேர்ந்த அயோத்தியின் அரசர் பகிரதன் கங்கையை கொணர்ந்து நாட்டை செழிப்பாக்கியதை போல தானும் ஒரு நதியை கொணர்ந்து புகார் நகரை செழிப்பாக்க விரும்பினான் . காந்த மன்னன் மீது தமிழ் முனி அகத்தியர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் . காந்தனுக்கு காவிரி ஆற்றை புகார் நகருக்கு கொண்டு வரும் ஆலோசனைகளை வழங்கினார். காந்த சோழனும் காவிரி ஆற்றை சோழ நாட்டில் பாய வழி செய்து  பெரும் பெறு பெற்றான்.   சோழர்கள் எப்போதும் காவிரி ஆற்றுக்கு அருகில்  தலை நகர் இருக்குமாறு நிர்மாணித்தனர் .அதனால் சோழ சம்ராஜ்யம் விவசாயத்தில் செழித்து நெற்களஞ்சியமாக இருந்தது .சோழ நாட்டில் தண்ணீர் பஞ்சமும் உணவுப் பற்றாக்குறையும் இருந்ததில்லை . காவிரி என்பது சோழர்களின் இன்னொரு அடையாளம்..

சோழர்களின் வரலாற்று தேடல் தொடரும். . .

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்