சோழர் தலைநகராக புகார்

சோழர் தலைநகராக புகார் நகரம் :

   பிரளய காலத்தின் போது தென்னகத்தை விட்டு வெளியேறி அனைவரையும் காப்பாற்றிய சத்ய விரதன் அயோத்தி நகரை நிர்மாணித்து அரசாளத் துவங்கினார் . அவரது மகன் இஷ்வாகுவும் சிறந்த அரசராக அயோத்தியை ஆளத் துவங்கினார் . இந்த வம்சா வழியில் #மாந்ததா என்ற அரசருக்கு பிறந்தவர் தான் அம்பரிசனும் , முசுகுந்தனும் . மாந்ததா தனது முதல் மகன்  அம்பரிசனை அயோத்திக்கும் , முசுகுந்தனை கங்கையின் தென் திசைக்கும் அதிபதியாக்கினார் .முசுகுந்தனே இஷ்வாகு குலத்திலிருந்து சோழர் குலத்தை துவக்கினார் .

       முதலில் கருவுர் பகுதியில் தன் அதிகாரத்தை செலுத்த ஆரம்பித்த #முசுகுந்தர் பல அரசர்களையும் வென்று சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்தினார் . முசுகுந்தனின் வீரத்தினையும் அறிவுத்திறனையும் கேள்விப்பட்ட இந்திரன் , போரில் தனக்கு உதவி செய்யுமாறு கோரினார். முசுகுந்தரும் இந்திரனுக்கு உதவி செய்து போரில் வெற்றி பெறச் செய்தார் .  இதனால் முசுகுந்தருக்கு வெற்றி பரிசாக ஏழு சிவலிங்கத்தையும் , மக்களை பாதுகாக்கும் பூதத்தையும் அனுப்பி வைத்தார் இந்திரன் . அந்த ஏழு சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார் அரசர் . அதில் முதன்மையானது திருவாரூரில் உள்ள தியாகேசர் கோவில் .

   தன் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளுக்கு  #புகார்  நகரை, தலை நகரமாக நிர்மாணித்தார் முசுகுந்தர் . இந்திரன் அளித்த பூதத்தை பூம்புகார் நகரின் காவல் தெய்வமாக்கினார் . நீதி நெறி தவறாது மக்கள் வாழவும் நோய்களிலிருந்து காப்பாற்றவும் ஐவகை மன்றங்களை உருவாக்கினார் . "களவினை கண்டறிய வெள்ளிடை மன்றமும் , பொய்யுரைப்போர் , பிறர் மனை நோக்குவோருக்கு தண்டனை அளிக்க பூத சதுக்கமும் , அரசன் நீதி தவறினாலும் , அரசனுக்கு துரோகம் செய்தவரை தண்டிக்கவும் பாவை மன்றமும் , பொது மருத்துவத்திற்காக இளைஞ்சி மன்றமும் , விஷக்கடி , நஞ்சு ஆகியவற்றிலிருந்து குடி மக்களை காக்க நெடுங்கல் மன்றத்தினையும்" உருவாக்கினார் .

    முசுகுந்தர் ஆட்சியில் மக்கள் செழிப்போடு வாழ்ந்தனர் . புகார் நகரிலிருந்து பல நாடுகளுக்கு வியாபாரம் செய்யப்பட்டது .மிகவும் செல்வ செழிப்பு மிக்க நகராகவும் அரசனுக்கு நிகராக குடி மக்களும் செல்வந்தர்களாய் வாழும் நிலையை ஏற்படுத்தினார் . மழை பொழிந்து விவசாயம் செழித்தது . நாடு வளம் பெற்றதால் மக்கள் மகிழ்வோடு கொண்டாடுவதற்கும் , தவறாது மழை பொழியவும் #இந்திரனுக்கு வழிபாடு விழா கொண்டாடும் முறையையும் அரசர் துவங்கினார். இந்திர விழா பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் உண்டு.  முசுகுந்தனுக்கு பிறகு சிபிசோழன் சோழ வம்சத்தின்  அரசனாகினான். சோழ வம்சம் சிபியிலிருந்து துவங்குகிறது.

#சோழ_வம்சத்தின்_தேடல் தொடரும் 2

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்