ஆவுடையார்கோயில்
திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.
இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது
இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது .
இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மாணிக்கவாசகர் விழா :-
இந்த பழமையான திருக்கோயிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் மாணிக்கவாசகர் திருவாதிரை பெருவிழா நடைபெறுகிறது. மாணிக்கவாசகருக்கு பூஜையும் அதைத்தொடர்ந்து 11 நாள் மண்டகப்படியும் நடைபெறுகிறது.
மண்டகப்படியின் முடிவில் தேரோட்டத்தோடு விழா முடிவடைகிறது.
11 நாள் மண்டகப்படிதாரர்கள்:-
முதல் நாள் :- நெல்வேலி பிள்ளைமார் வகையரா மற்றும் நவக்குடி கிராமத்தார்கள்
இரண்டாம் நாள் :- ஆவுடையார்கோயில் கிராமத்தார்கள், நேமத்தான்பட்டி அண்ணாமலை செட்டியார் குடும்பத்தார்கள்.
மூன்றாம் நாள்:- புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்காக அரசூர் கிராமத்தார்கள்
நான்காம் நாள் :- கோபாலர் கட்டளை சிங்கவனம் ஜமீனுக்காக பில்லுக்குடி கிராமத்தார்கள்
ஐந்தாம் நாள் :- பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி அறக்கட்டளை
ஆறாம் நாள் :- வீரசேகரன் சேர்வைக்காரர், மறவனேந்தல்
ஏழாம் நாள் :- தஞ்சை சமஸ்தானத்திற்காக திருவாவடுதுறை ஆதீனம்
எட்டாம் நாள் :- இராமநாதபுரம் சமஸ்தானம்
ஒன்பதாம் நாள் :- பாலையவனம் ஜமீனுக்காக கரத்திக்கோட்டை, விச்சூர் சேர்வைக்காரர்கள்
பத்தாம் நாள் :- சிறுமருதூர் சேர்வைக்காரர் குடும்பத்தார்
பதினோராம் நாள் :-கே ஆர் ஆர் குடும்பத்தார்கள்
* சியாம் சுந்தர் சம்பட்டியார்*
Comments
Post a Comment