தூங்கெயில் எறிந்த தொடிதோட் #செம்பியன் :

தூங்கெயில் எறிந்த தொடிதோட் #செம்பியன் :

     குடகுமலையை உடைத்து காவிரியை புகார் நகருக்குள் பாய விட்ட காந்த சோழனுக்கு பின் அவரது மகன் காகந்தி சோழனும்   அதற்கு பிறகு " தூங்கெயில் எறிந்த தோடி தோட் செம்பியன்" என்ற வீரமிக்க அரசர் சோழ நாட்டை ஆண்டார் .

     தோடி தோட் செம்பியனின் உண்மையான பெயர் தெரியவில்லை.   அக்காலத்தில்  கொங்குப்பகுதியின் மலை மீது #அகப்பா என்ற நகர் இருந்தது. அகப்பா நகரின் "அரசன் வண்டன் மிகப் பெரும் பொக்கிஷங்களுடன் காண்பவர் வியக்கும் வண்ணம்  மலை மீது மிகப்பெரிய கோட்டை கட்டி அதன் பிரம்மாண்டமான கதவுகள் வானத்திலிருந்து தொங்குவதை போன்ற அமைப்புடன்" நிர்மாணித்திருந்தான். அளப்பரிய செல்வங்களையும் அரிய பொக்கிஷங்களுடன் தனது கோட்டையில் பாதுகாத்து வந்தான் வண்டன் . இக்கோட்டை #தூங்கெயில் என்றழைக்கப்பட்டது. வண்டனை வென்ற  பல்யானை செங்குட்டுவ அரசன் தூங்கெயில் கோட்டையையும் பொக்கிஷங்களையும் தனதாக்கிக் கொண்டான். அவனது வழிவந்த  கடவுள் அஞ்சி என்ற  அரசர் கோட்டையையும் பெரும் செல்வத்தையும்  பாதுகாத்து வந்தார் .

       சோழ அரசர் தோடி தோட் செம்பியன் அகப்பா நகரின் தூங்கெயில் கோட்டையை தாக்கி அரசர் கடவுள் அஞ்சியை தோற்கடித்து வென்றார். பிறகு முழு செல்வத்தையும் தனதாக்கிக் கொண்டு , சோழர் தலைநகருக்கு இணையாக வேறு தலை நகர் இருக்கக் கூடாது என்று தூங்கெயில் கோட்டையை எரித்து அழித்தார் .  இதனால் இவ்வரசன் "தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்" என்றழைக்கப்பட்டான்..
#சோழர்களின்_தேடல்_தொடரும்...

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்