சிபிசோழன்

சங்க காலத்திற்கு முற்பட்டவரான #சிபிசோழன் , சோழர்களில் மிகப் பெருமை வாய்ந்த அரசராக போற்றப்படுகிறார் . இவரது காலம் ராமாயணம் , மஹாபாரதத்திற்கும் முன்பானது.  ராமருக்கு குலப்பெருமையை பற்றி சொல்ல #சிபியின் வரலாற்றைத் தான் கூறினர்.
#சிபி சக்கரவர்த்தி எல்லாச் சங்கப் புலவராலும், பிற்பட்ட கால புலவராலும், சோழ மரபின் முன்னோரைப்பற்றிய இடங்களில் எல்லாம் குறிக்கப்படுள்ளார்.  பருந்திற்கு அஞ்சி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவினை காக்க தன் சதையை கொடுத்த பெருமை படைத்தவர்.

    "புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கி கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் #சிபியின் மடியில் விழுந்ததது.  புறாவுக்காகப் பருந்து பின்னால் நின்றது.  புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும் ". பசியுடன் வந்த கழுகையும் ஏமாற்றாது , அதே வேளையில் புறாவை காப்பாற்றி தர்மத்தை காப்பாற்ற நினைக்கிறார்

புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன் சதையினை அறுத்து வைத்தான்.  புறாவின் எடை அதிகமாக இருந்தால் #சிபி அரசன் தன் உடலின் பெரும்பகுதியை இழந்தான் . புறாவிற்காக தனது செங்குருதியோட தசைகளை இயந்ததால் #செம்பியன் என்று பெயர் பெற்றான் . இவரது பெயராலே #சோழர்கள் #செம்பியர் மரபினர் என்றழைக்கப்பட்டனர்.
#சோழர்களின் தேடல் தொடரும்....

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்