மனுநீதிச் சோழன்.

மனுநீதிச் சோழன். 

         தொன்ம சோழர்களின் தலைநகரமாக புகார் நகர் விளங்கினாலும் சில காலம் #திருவாரூர் தலை நகராய்  இருந்துள்ளது. திருவாரூரில் தான் முசுகுந்த சோழன் பிரதிஷ்டை செய்த விடங்கலிங்கமும் இருந்தது. மனுநீதிச்சோழன்   நீதி நெறி தவறாது ஆட்சி செய்து வந்தான். மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர்.மன்னரின் இயற்பெயர் தெரியவில்லை. சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.முசுகுந்தர் பிரதிஷ்டை செய்த இறைவனின் திருப்பெயராலே வீதி விடங்கன் என்று பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். விடங்கனும்  அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

     மக்கள் குறைகேட்டு நீதி சொல்ல தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான்.  அந்த மணிக்கு #ஆராய்ச்சிமணி என பெயரிட்டான் சோழன் . ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன்  தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். எதிரே வந்த கன்றுக்குட்டியை  கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றி கொன்று விட்டான். கன்று இறந்ததை அறிந்த தாய்பசு பெருந்துயருற்று அரண்மனை வாயிலில் ஆராய்ச்சிமணியை அடித்தது . விவரம் அறிந்த அரசன் கன்றினை கொன்ற தன் மகனை கொல்ல ஆணையிட்டான். அரசனின் ஒரே வாரிசை  இழக்க விரும்பாத பணியாளர் எவரும் துணியவில்லை. அரசர் அமைச்சரை விட்டு வீதிவிடங்கன் மேல் தேரை ஏற்ற சொன்னான். எதிர்கால சோழனை கொல்ல விரும்பாத அமைச்சர் அக்கணமே தற்கொலை செய்து கொண்டார். கடைசியில் அரசனே தன் மகனை தேர்காலில் இட்டு கொன்று நீதியை நிலை நாட்டினான்.  அதனால் மனுநீதிச்சோழன் எனப் பெயர் பெற்றான். 

   இதே போன்ற வரலாற்றை சோழர்குலத்தில் இருந்து இலங்கையை ஆண்ட #எல்லாளன் மீதும் கூறுவர். அதுவும் உண்மையாக இருக்கலாம். மனுநீதிச் சோழனை பின்பற்றியே அவ்வரசனும் செய்திருக்கலாம். ஆனால் , மனு நீதிச்சோழனும் எல்லாளளுன் வேறு வேறு நபர்கள். மனுநீதிச் சோழனுக்கு முன்பும் பின்பும் திருவாரூரை சோழர்கள் ஆண்டதாய் குறிப்பில்லை. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தலைநகர் அந்தஸ்தில் இருந்ததாய் தகவல் உண்டு.

#சோழர்களின் வரலாற்றுத் தேடல்கள் தொடரும்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்