சோழர் கடற்படை3

சோழர் கடற்படை 500 வருடங்களாகப் போரில் ஈடுபட்டுள்ளது. இதில் தொடர்ச்சியான சிறு சண்டைகள் முதல் போர்கள்வரை அடங்கும். தீபகற்பத்தை கட்டுப்படுத்த பாண்டியருக்கும் சோழருக்கும் இடையிலான 5ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு பல கதைகளையும் நாடோடிக் கதைகளயும் உருவாக்கியது. குறிப்பிடத் தக்க போர் நடவடிக்கைகள் பின்வருமாறு
பாண்டியர் போர் வெற்றி (கி.பி 1172)
பாண்டியர் போர் வெற்றி (கி.பி 1167)
பாலி போர்க் கப்பல்கள் அழிப்பு (1148)
கலிங்க படையெடுப்பு கடற் சண்டைகள் (1081-83)
இரண்டாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (கி.பி. 1025-1028)
முதலாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (கி.பி. 1022 CE -1025)
கடாரம் மீதான சோழர் படையெடுப்பு (1024-1025)
கம்போஜா எனப்பட்ட கம்போடியா இணைப்பு (கி.பி ?-996)
இலங்கை மீது படையெடுப்பு (கி.பி 993–1077)
பல்லவ கடற்படையுடன் மோதல்கள் (கி.பி 903 - 908)
ஆட்சேர்ப்பும் சேவையும்
கப்பற்படைத்தலைவர்கள் கடற்படை வீரர் ஆட்சேர்ப்பு, பயிற்சி போன்ற விடங்களில் சுதந்திரமாகச் செயற்பட சோழ சக்கரவர்த்திகள் அனுமதி அளித்திருந்தனர். அங்குச் சிக்கலான சோதனைகள் மற்றும் மதிப்பீடு இருக்கவில்லை. எக்குடிமகனும் அல்லது குடிமகன் அல்லாதவரும் கடற்படை சேவையில் சேர முடியும்.
துறைமுகம், போர்க்கப்பல்கள்.........
சோழர்களால் பயன்படுத்தப்பட்ட மிகப் புராதன துறைமுகமாக காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது. பின்பு அவர்கள் மேலும் பல துறைகங்களை பயன்படுத்தவும், புதிதாகக் கட்டவும் செய்தனர். அவற்றில் சில முக்கிய துறைமுகங்களாவன:
அரிக்கமேடு
காஞ்சிபுரம்
நாகப்பட்டினம்
குளச்சல்
கொற்கை
கடலூர்
தூத்துக்குடி

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்