சோழப் பேரரசு1
- Get link
- X
- Other Apps
வரலாற்றாளர்கள் சோழ ஆட்சியினை மூன்று புரிந்துகொள்ளக்கூடிய கட்டங்களாகப் பிரிக்கின்றனர். முதலாவது காலகட்டம் முற்காலச் சோழர்கள் காலம். இரண்டாவது காலம் இடைக்காலச் சோழர்கள் காலமாகவும், கடைசிக் காலகட்டம் சாளுக்கிய சோழர் காலமாகவும் உள்ளது.
சோழர்கள் 9ம் நூற்றாண்டு அரைப்பகுதி முதல் 13ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தங்கள் வல்லமையின் உயரத்தில் காணப்பட்டனர் முதலாம் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராசேந்திர சோழன் காலத்தில் சோழப் பேரரசு ஆசியாவில் ஓர் இராணுவ, பொருளாதார, கலாச்சார சக்தியாக விளங்கியது 1010 முதல் 1200 வரையான காலப்பகுதியில் சோழரின் நிலப்பகுதிகள் மாலைதீவுகளிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி ஆறு வரை விரிவடைந்தது. இராஜராஜ சோழன் தென்னிந்தியா தீபகற்பத்தை வெற்றி கொண்டு, இலங்கையின் பகுதிகள் மற்றும் மாலைதீவுகளின் கைப்பற்றப்பட்ட பகுதிகளை இணைத்தார் இராசேந்திர சோழன் அனுப்பிய வெற்றிகரமான திட்டமிடப்பட்ட பயணம் வட இந்தியாவின் கங்கை ஆறு வரை சென்று, பாடலிபுத்திரம் மகிபாலவின் பாலப் பேரரசை தோற்கடித்தது. அவர் அவுத்திரேலியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான மலாய் தீவுக்கூட்ட பேரரவு மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment