சோழர் கடற்படை2

சோழர் கடற்படை கலப்பு பதவிக் கட்டமைப்பு கொண்டிருந்தது. அவர்கள் கடற்படை பதவிகளையும், தரைப்படையிலிருந்து பெறப்பட்ட பதவிகளையும் கொண்டிருந்தனர் சோழர் கடற்படையானது கடற்படை பதவி மற்றும் தரைப்படை பதவி முறைகளைப் பயன்படுத்தியது. தற்கால பதவி முறைகளும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, தரைப்படை கப்டன் கடற்படை லெப்டிணட் தரத்திற்கும், கடற்படை கப்டன் தரைப்படை கேணல் தரத்திற்கும் சமமானது. மற்றவை முற்றிலும் வேறுபட்டன. சில பதவித் தர ஒப்பீடுகள் பின்வருமாறு:
மிகச்சிறந்த படைத்தலைவர் :சக்கரவர்த்தி - பேரரசன்
கடற்படையின் கட்டளை அதிகாரி :ஜலதிபத்தி - கடற்படையின் கடற்படைத் தலைவருக்குச் சமம்
போர்க்கப்பல்களின் படைத்தலைவர் : பிரிவு+ அதிபதி அல்லது தேவர்/ன் அல்லது நாயகன் - கடற்படை துணைத் தலைவருக்குச் சமம்
போர்க்கப்பல்களின் படைப்பிரிவு படைத்தலைவர் : கனதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம்
குழு படைத்தலைவர் : மண்டலதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம்
கப்பல் படைத்தலைவர் : கலபதி - கப்டன் தரத்திற்குச் சமம்
கப்பலின் ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி : காப்பு - ஆயுதங்களுக்களுக்கான அதிகாரி
கப்பலோட்டிகளின் பொறுப்பதிகாரி : சேவை - மூத்த மற்றும் பொறியியல் அதிகாரி
தரையிறக்க பொறுப்பதிகாரி (ஈரூடக அணி) : ஈட்டிமார் - ஈரூடக அணி மேஜர் அல்லது கப்டன்
ஏனைய கடற்படைசார் பிரிவுகள்[தொகு]
சோழ கடற்படையின் துணை படைகள்: அரச கடற்படையைக் கொண்டிருந்த சோழர் மற்ற சேவைகளாகக் கடலுக்குரிய தங்கள் சொந்த பிரிவுகளைக் கொண்டிருந்தனர். இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகச் சுங்கத் திணைக்களம், குடிப்படை, முத்துக் குளித்தலுக்கான பிரத்தியோக அரச உரிமையைக் கொண்டிருந்தனர். இந்த அரச சேவைகளுடன் சிறிய ஆனால் வல்லமைமிக்க படைகள் பல்வேறு வர்த்தக கழகங்களினால் பராமரிக்கப்பட்டன. இக்கழகங்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேவையான காலங்களில் கூலிப்படையாகவும் வலிமையூட்டவும் பயன்படுத்தப்பட்டன
சுங்கம் மற்றும் தீர்வை
சுங்கு (சுங்க இலாகா) என அழைக்கப்பட்ட சுங்கப் பிரிவு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, புராதன உலகில் அவ்வாறு ஒன்று இல்லாதவாறு தனித்துவம் பெற்றிருந்தது. இது இயக்குனர் தளபதியின் கீழ் இயங்கியது. அவர் தலை-திறை என அழைக்கப்பட்டார். இப்பிரிவு மிகவும் வளர்ச்சியடைந்த, கொண்டிருந்தது பல்வேறு துறைகளைக் கொண்டிருந்தது.
கடலோர காவலர்கள்
12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடற்படை சோழரின் வர்த்தக, சமய, அரசியல் விருப்பங்களுக்காகத் தொடர்ச்சியாக சண்டையிட்டது. இதனால் தாய்நாட்டு துறைமுகம் பாதுகாப்பற்றுக் காணப்பட்டது. இது கடற்படையின் தந்திரோபாயத்தை மாற்றச் செய்து, பெரிய கலங்களைப் படைப் பெருக்கத்திற்கு அழைக்க நேரிட்டதால், பெரிய எண்ணிக்கையில் பாரிய ஆயுதந்தரித்த இலகு கப்பல்கள் துணைப் படையின் மேம்பாட்டிற்கு வழிவகுத்தது. முன்பு, கரைப்பிரிவு இத்தேவையின் இயற்கைத் தெரிவாகவும் சோழர் பிரதேச நீர்கள், தாய்நாட்டுத் துறைமுகங்கள், புதிதாகக் கைப்பற்றிய துறைமுகங்கள் மற்றும் கரையோர நகரங்களின் சுற்றுக் காவல் ஆகிய பொறுப்புக்கள் கொண்ட படையாகக் காணப்பட்டது.
தனியார் படைகள்
பெறுமதிமிக்க வெளிநாட்டுப் பரிமாற்றத்திற்காக அரசு வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கியிருந்தமை சக்தி வாய்ந்த வர்த்தக சங்கங்களை உருவாக்கி, அவற்றில் சில பிராந்திய ஆளுனர்கள் விடச் சக்தி வாய்ந்த வளர்ந்தது சர்வதேச வணிகத்தின் போட்டிக்களப் பெருக்கத்தினால் ஆழ்கடலில் சிரமங்களில் சிக்கிய வணிக கப்பல்களைக் காப்பாற்றல், வலுப்படுத்தல் உதவி ஆகியவற்றை உரிய காலத்தில் செய்வதில் அரசு சிரமங்களை எதிர்நோக்கியது. இனால் தனியார் கடற்படைகளை உருவாக்க வேண்டியதாயிற்து. ஐரோப்பியர்களைப் போல இவர்களுக்கு எந்தத் தேசிய அடையாளங்களும், பல்தேசிய குழுக்களும் இல்லை.
ஆனால், அவர்கள் பேரரசுகளைவிட வர்த்தக சங்கங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். பொதுவாக, அவர்கள் பாதையைக் கண்டறிதல், வழித்துணை மற்றும் பாதுகாப்பு கடமைகளைச் செய்தனர். ஆயினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இவர்கள் பேரரசு நலன்களுக்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். வர்த்தக சங்கங்கள் வேலைக்கமர்த்திய குறிப்பிடத் தக்க தனியார் கடற்படைகள் காணப்பட்டன.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்