அக்காலக் கப்பல்கள்

ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மகனின் ஆட்சிக்காலத்தில் சிக்கலான வகைப்பாட்டுக் கடற்கலங்கள வகைள் மற்றும் அதன் பயன்பாடு என்பன இருந்தன. அவற்றில் எஞ்சிய கடற்கள வகைகளின் பெயர் மற்றும் பயன்பாட்டு என்பன கீழ் வருமாறு.
தாரணி - ஆழ்கடல் போருக்காக வடிவமைக்கப்பட்ட தற்கால அழிப்பு கடற்கலங்களுக்குச் சமமானது.
லூலா - சிறு போர் மற்றும் வழித்துணை கடமைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட தற்கால வழித்துணைக்கப்பல்களுக்குச் சமமானது.
வஜிரா - சிறியளவு ஆயுதம்தரித்த, விரைவுத் தாக்குதல் போர்க்கப்பல்.
திரிசடை - பெரியளவில் ஆயுதம் தரித்த இரண்டுக்கு மேற்பட்ட இலக்குகள் சண்டையிடக்கூடிய என அறிக்கையிடப்பட்ட போர்க்கப்பல்கள் அல்லது போர்க்கலங்கள். இவை வேகம் மற்றும் தாக்குதல் என்பவற்றைவிட அதன் கட்டுமானத்தில் தங்கியிருந்தன.
அக்காலக் கப்பல்கள் ஒரு சிறிய ஈரூடகப்படையை வேலைக்கமர்தியபோதும், இவ்வகைக் கப்பலில் அவர்களுக்குத் தனி அறைகள் மற்றும் பயிற்சி பகுதியில் என்பவற்றைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இக்கப்பல் சமநிலையற்ற போர் நடவடிக்கை ஈடுபடக்கூடியது என்று கூறப்படுகிறது.
இவ்வகை கடற்களங்களைத்தவிர அரச உல்லாசப்படகுகளும் இருந்தன. அவை பின்வருமாறு:
அக்ரமண்டம் - பின்பகுதியில் அரச தங்குமிடத்துடன் கூடிய அரச உல்லாசப்படகு.
நீலமண்டம் - நீதிமன்றங்கள் நடத்தக்கூடிய, உயர் அதிகாரிகள் / அமைச்சர்கள் தங்கக்கூடிய விரிவான வசதிகள் கொண்ட அரச உல்லாசப்படகு.
சர்ப்பமுகம் - நதியில் பயன்படுத்தப்பட்ட சிறிய உல்லாசப்படகு (அலங்கார பாம்பு தலையைக் கொண்டிருந்தன)
இவை தவிர, கடலிலும் தரைப்பகுதி நீர்ப்பகுதிகளிலும் பயன்படக்கூடிய பல கப்பல் வகைகளையும் அவற்றின் பயன்பாட்டையும் புறநானூறு குறிப்பிடுகின்றது. அவை பின்வருமாறு:
இயந்திரம் - சக்கரங்கள் நடைமுறைப்படுத்தும் இயந்திர துடுப்புகள் கொண்ட கலப்பினக் கப்பல்.
கலம் - மூன்று பாய்மரங்கள் கொண்ட காற்றுத் திசையைப் பொருட்படுத்தாது பயணிக்கக்கூடிய பெரிய கப்பல்கள்.
புனை - கடலோர கப்பல் மற்றும் தரைப்பகுதி நீர்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர அளவிலான கப்பல்.
பற்றி - வர்த்தக பொருட்களை நீர்நிலைகளில் ஏற்றிச் செல்லக்கூடிய பெரிய படகு
ஓடம் - பெரிய துடுப்புகள் கொண்ட சிறிய படகு
அம்பி - ஒற்றைப் பாய்மரம், துடுப்பு என்பவற்றுடன் கூடிய நடுத்தர அளவிலான படகு.
தோணி - பாறைப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சிறிய படகு.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்