தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்
“தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று “
உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! . களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள்.
இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்.,
களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் "தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது" பொறித்துவைக்கப்பட்டுள்ளது. கள்ளர்களை “விருதுகள் பலகூறு வீரைமுடையான் “என்று மிராஸ்ரைட் கல்வெட்டு போற்றியுள்ளது.மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது

Comments
Post a Comment