கள்ளர்குடி
தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் குடிகளுள்
கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இக்குடியினர் தம் இயற்பெயருடன் சுமார் ஈராயிரம் பட்டப் பெயரையும் கொண்டு விளங்குகின்றனர். உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ள எந்த சமுதாயமோ குடிகளோ இல்லை என்பதும் வரலாறு. இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு சோழர் கால கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைய நிலையில் பல பட்டங்கள் எதுவித மற்றமும் இன்றியும் சில பட்டங்கள் சிறிது மாற்றத்தோடும் கானப்படுகின்றன.
சோழ மன்னர்கள் தம் ஆட்சிக்குற்பட்டிருந்த சிற்றரசர்களைத் தம் அரசியலில் உயரதிகாரிகளாக கொண்டிருந்தனர், அவர்களே கல்வெட்டுகளில் கையொப்பமும் மேலொப்பமும் இட்டுள்ளனர். சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர். மேலும் சோழர், மலையர், மழவர், பழுவேட்டரையர், சேதிராயர், வாணாதிராயர், பேசாளர், சாளுக்கியர், கங்கர், முத்தரையர், பல்லவர், அதியமார் முதலிய கள்ளர் குலத்தவர் நாடாண்டுள்ளனர் என்பதும் வரலாறு.
சக்கரவர்த்திகளும், மாமனர்களும், மன்னர்களும் தம் கீழ்ப்பணியாற்றிய அதிகாரிகள், வீரர்கள், சான்றோர்களுக்கு அவர்களின் அருஞ்செயல்களைப் பாராட்டி அவர்களுக்கு உயரிய பட்டங்களை வழங்குவது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது. பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
முதலாம் பராந்தகனுக்கு உதவியாக இருந்த கள்ளர் குல கங்க மன்னன் இரண்டாம் பிரிதிவிபதிக்கு அவன் வாணர்களின் தலைவன் என்பதால் வாணாதிராயன் என்னும் வீர விருது வழங்கப்பட்டது. இவ்வாரே தென்னவன் மூவேந்த வேளான், இராசராசக் காடவராயன், ஆளப்பிறந்தான் முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. சோழமண்டலத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் ஈழத்தரையர், ஈழமுண்டார், கொல்லமுண்டார், கொல்லத்தரையர், கொங்கரையர், கங்கநாட்டார், சோழகங்கநாட்டார், காலிங்கராயர், கடாரத்தேவர், கடாரத்தலைவர், கடாரம்தாங்கியார், மண்ணையார், சிங்களாந்தான், சிங்களராயர், சிங்களேந்தியார், கேளராயர், கேரளாந்தகன் போன்ற பட்டங்கள் போர் வெற்றிகளை குறித்து வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலூர் என்ற இன்றைய திருக்கோவலூர் மலையமான் என்னும் கள்ளர் குல மன்னர்களால் ஆளப்பட்டது. திருமுடிக்காரி இக்குடியில் பிறந்த வள்ளலாவான். கோவலூரை ஆண்டவர்கள் கோவலராயன் என்றுமழைக்கப்பட்டனர். இக்குடியினரின் மருவிய பட்டப்பெயரே இன்று கோபலர் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய தர்மபுரி சங்ககாலத்தில் தகடூராக இருந்தது. தடூரை ஆண்டவர்கள் அதியமான் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். அதியமான் என்னும்பட்டம் மருவி அதியமார் என்றும் இப்போது அழைக்கப்படுகிறது.
வடக்கே பாலாற்றுக்கரையில் ஆண்டோர் வாணாதிராயர் என்னும் கள்ளர் குல மன்னர்களாவர். இங்கு வாணாதிராயன் பட்டினம் என்றோர் ஊரும் உண்டு. இவர்கள் பாலியார், பால்நாட்டார், பாலாண்டார், மாவாலியார் என்னும் பட்டங்களிலும் அழைக்கப்படுகின்றனர்.
இது போன்று திருமுனைப்பாடியை ஆண்டவர்கள் முனையர் என்ற பட்டமும், சேதிநாட்டை ஆண்டவர்கள் சேதிராயர் என்ற பட்டமும், மழவ நாட்டைகொண்டவர்கள் மழவராயர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் என்பது தெளிவாகிறது.
புதுக்கோட்டை பகுதியிலுள்ள கொடும்பாளூரை ஆண்டோர் கள்ளர்குல இருக்கு வேளீர்களாவர். இவர்கள் சோழர்களுக்கு பெண் கொடுக்கும் உரிமை கொண்டோராவர். கொடும்பாளூரை கல்வெட்டுக்கள் கொடும்பை எனக் குறிக்கின்றன. கொடும்பைராயர் என்ற பட்டம் இன்று மருவி கெடும்புராயர், கொடும்பாளூர்ராயர், கொடும்பூராரென்றும் வழங்கி வருகின்றன. மேலும் இருங்கோ வேளார் என்னும் பெயரும் இன்று இருங்களார் என்ற பட்டமாக மருவி விட்டது. அண்ணவாயில், பூவனைக்குடி முதலிய இடங்களும் கொடும்பாளூரைச் சேர்ந்தபகுதியாகும், இப் பகுதி கள்ளர் குலத்தவர்களுக்கு அண்ணவாசல்ராயர் என்ற பட்டமும், பூவனைக்குடி கள்ளர்களின் பட்டமாகிய பூவனையரையர் என்ற பட்டம் இன்று பூனையர் என்று திரிந்து வழங்குகிறது. பூவனைக்குடியில் பூதிகளறி அமரூன்றி என்னும் முத்தரைய மன்னன் இங்கு புட்பவனேசுரருக்கு ஒரு கோயிலைக் குடைந்திருக்கிறான். கொடும்பாளூர் குறுநில மன்னன் பராந்தகன் சிறிய வேளர் சுந்தரசோழன் காலத்தில் ஈலத்தை வென்று அப்போரிலேயே உயிநீத்த பெருமையும் இருக்கு வேளீர் பரம்பரையையே சாரும்.
ஒருநாட்டின் வரலாறு பெரும்பாலும் அந்த நாட்டின் அரசுகளின் தோற்றமும் மறைவும் பற்றியதாகவே அமைந்திருக்கும். அரசர்களின் செயல்கள், பெற்ற வெற்றிகள்,கண்டநன்னெறிகள் ஆகியவற்றை ஒட்டியே வரலாறுகளும் அமைந்துள்ளன. அரசர்களை அடுத்து அந்நாட்டின் சான்றோர்களை கொண்டு வரலாறுகள் புதிய திருப்பங்களையும் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது..........Thanks.........International kallar peravai
Comments
Post a Comment