பூலித்தேவர்
பூலித்தேவர்தான் தென் பாளையப்பட்டுகளின் படைகளின் தலைவராக இருந்துள்ளார்.இவரது ஆதிக்கத்தில் மேற்கு நாட்டின் மறவர் பாளையங்களும் திருநெல்வேலியின் இதர பாளையங்களும் இருந்துள்ளது. திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் பாளையக்காரர்கள் அனைவரும் மதிக்கும் மிக மரியாதைக்குரியவராகவும் சர்வதிகாரம் பெற்ற சுதேச தலைவராக இருந்துள்ளார் எனவும் கூறுகிறார்.இன்றை பல வரலாற்று ஆய்வாளர்கள் தென்காசியின் ஆளுமை பாண்டிய மன்னனுக்கு பிறகு பூலித்தேவர்களிடமே இருந்து வந்தது என கூறுகின்றனர்.இத்தனையும் கூறும் ஆய்வாளர்கள் பூலித்தேவர் என்பது ”பூழியன்” என்ற பூழித்தேவர் என்ற பாண்டியரின் கிளை வழியினர் என்பதும் பாண்டியர்களின் வழித்தோன்றல் என கூற மறுப்பது ஏனோ? பூழியன் என்பது பாண்டியரின் வழித்தோன்றல்களான பாண்டியர்களேயாகும்.
Comments
Post a Comment