குற்றப்பரம்பரை சட்டம்.......1915
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டு வரப்பட்டது.பிரெஞ்சுப்புரட்சியின் விளைவாகப்பிறந்தது இந்த சட்டம்.ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இனக்குழுக்களைக்கண்டறிந்து அவர்களைக்கைது செய்து சிறையில் அடைப்பதே இந்த சட்டம்.வெளியில் விட்டாலும் தினசரி காவல் நிலையத்தில் கைரேகை வைக்க வேண்டும்.பஞ்சாபில் முதலில் அமுலுக்கு வந்தது.பிறகு தென் மாநிலங்களிலும் கொண்டு வரப்பட்டது.தென் தமிழகத்தில் கள்ளர்கள்,மறவர்கள்,வலையர்கள்,குறவர்கள்,படையாட்சிகள்,வேப்பூர் பறையர்கள் மீது இந்த சட்டம் பாய்ந்தது. ஆனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக கள்ளர்கள் தான்.அதிலும் குறிப்பாக பிற மலைக்கள்ளர்கள்.இந்த சட்டப்படி அதில் குற்றம் சாட்டப்பட்ட இனத்தவர்கள் தினசரி காவல் நிலையத்தில் கைரேகை வைக்க வேண்டும்.அன்று படிப்பறிவில்லாதவர்கள் தான் அதிகம்..கைது செய்யப்பட்டவர்களை சுரங்க வேலைக்கும்,தொழிற்சாலைகளுக்கும் கூட வெள்ளையர்கள் பயன் படுத்திக்கொண்டார்கள்.1015ல் வந்த சட்டத்தின் மூலம் 1920 வரை 1772 பேர் கைது செய்யப்பட்டார்கள்.அதன் விளைவாக ஏப்ரல் 3,1920ல் பெருங்கமாநல்லூரில் இன்னொரு ஜாலியன் வால பாக் போன்ற கலவரம் வெடித்தது.அவ்வூர் மக்கள் கை ரேகை வைக்க மறுத் போராட்டம் நடத்தினர்.அனைவரும் பிறமலைக்கள்ளர்கள்.ஆங்கிலேயர்கள் அவர்களை ஊர் மத்தியில் வரவழைத்து கூடியிருந்த கூட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தினான்.அதில் 7 பேர் மரணம் அடைந்தனர்[சாகும் தருவாயில் இருந்தவருக்கு தண்ணீர் கொடுக்க வந்த பெண்மணியையும் சேர்த்து]...மீதி அகப்பட்ட 700 பேரை திருமங்கலம் வரை கால் நடையாகவே இழுத்து வந்தனர்..அதில் 68 பேர் மீது வழக்கு போடப்பட்டு 38 பேர் தண்டனை பெற்றனர்......இச்சம்பவம் நடைபெற்ற போது தேவர் பசுமலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்.இந்த சம்பவம் தேவரின் மனதில் ஆறா வடுவாகப்பதிந்தது.1932ல் தேவர் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.ஆங்கிலேயர்களிடம்"பிறப்பின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் குற்றம் சுமத்தாதே.இங்கிலாந்தில் குற்றம் நடக்கவில்லையா?அங்கு இன அடிப்படையிலா கைது செய்கிறீர்கள்?உடனே இந்த சட்டத்தை நீக்குங்கள்.மக்களிடம்" கட்டை விரலை வெட்டிக்கொள்.ரேகை வைக்காதே.ஜெயிலுக்கு போ" என வேண்டு கோள் விடுத்தார்.அவர் பிரச்சாரத்தைகேள்விப்பட்டு சிவகாசி காவல் நிலையத்திற்கு டி எஸ் பி முன்னால் வரவழைக்கப்பட்டார். அங்கும் தேவர் அதே கருத்துகளை தெரிவித்ததுடன் விரைவில் இந்த சட்டத்திற்கு எதிராக மாநாடு நடத்தப்போகிறேன்.அதன் தீர்மானத்தை கவர்னரிடம் தரப்போகிறேன் .நீங்களும் கலந்து கொள்ளுங்கள் எனக்கூறி விட்டு எழுந்து விட்டார்.வெளியில் காத்திருந்த மக்கள்" தேவர் வாழ்க" "கைரேகை சட்டம் ஒழிக" என கோஷமிட்டனர்.டி எஸ் பி க்கு சந்தேகம் தேவர் விசாரணைக்கு வந்தாரா? அல்லது மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க வந்தாரா?திகைத்துப்போய் நின்றார்.................பின்பு தேவர் பசும் பொன் அருகில் அபிராமம் என்னும் ஊரில் அந்த மாநாட்டை நடத்தினார்.மே 12,13 1934ல் இரண்டு நாட்கள் மாநாடு நடந்தது.அம்மா நாட்டில் காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் வரதராஜுலு நாயுடு,சசி வர்ணத்தேவர்,பிள்ளையார்குளம் பெருமாள் தேவர்,நவநீத கிருஷ்ணன் தேவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment