தேவர்.........அண்ணாதுரை
- Get link
- Other Apps
1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா ஆண்டு மதுரையில் ஒரு வாரம் விமரிசையாகக்கொண்டாடப்பட்டது.புலவர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். சேலத்தை சார்ந்த ஒரு சிறுமி சொற்பொழிவு ஆற்றினாள். அதன் பிறகு பசிய அண்ணாதுரை பழைய காலமாக இருந்தால் இந்த சிறுமியை ஞானப்பால் குடித்தவர் என்று பாராட்டி தூக்கி வைத்துக்கொண்டாடுவார்கள். மேலும் அவர் பேசிய கருத்துக்கள் திருஞான சம்பந்தரை சாடுவதாக இருந்தது.அதைக்கேட்ட தேவருக்கு கோபம் வந்தது.அங்கு கூடியிருந்த பலருக்கும் அதே கோபம் அண்ணாதுரை மீது.ஆனால் அடுத்து பேசிய பி டி ராஜன் "கருப்புச்சட்டைக்காரர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அவர் யோக்யமானவர் இல்லை" எனக்கூறிவிட முடியாது என்றார்.அன்று தேவர் பேசாமல் ஏனோ விட்டு விட்டார்.அடுத்த நாள் தேவர் தமது சொற்பொழிவில் அண்ணாதுரையை கடுமையாக சாடினார்.பி டி ராஜனுக்கும் அறிவுரை வழங்குவது போல் அவர் பேச்சு அமைந்தது."தெய்வ வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்களை வெளியில் பேசச் சொல்லுங்கள்.இங்கு தெய்வ வீட்டில் அது பற்றி பேசக்கூடாது" என்றார் தேவர்..
- Get link
- Other Apps
Comments
Post a Comment